(பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி? How to invest share market details in tamil )
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி ( How to invest share market details in tamil) பங்குச்சந்தையில் முதலீடு செய்வதன் மூலமாக உங்களுடைய முதலீடான பணத்தை நீங்கள் அதிகரிக்கலாம் என்ற எண்ணத்தில் தான் நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறீர்கள் ஆனால் அனைத்து நேரங்களிலும் அது சரியாக அமைவதில்லை ஏனென்றால் பங்குச்சந்தை என்பது ஏற்றம் இறக்கம் உள்ள ஒரு வணிகம் ஆகும்.
பெரும்பாலான மக்கள் அதிக பேராசியின் காரணமாக பங்குச் சந்தைகளில் பணம் அதிகப்படியாக இருக்கலாம் என்ற காரணத்தினாலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது போன்ற விஷயத்தில் ஈடுபடுகின்றனர் நிச்சயமாக பங்குச்சந்தையில் அதிகப்படியான லாபத்தை ஈட்டலாம் அதற்கு நமது சரியான முறையில் பயிற்சியும் சிறந்த கணிக்கும் திறனையும் கொண்டிருந்தால் சாத்தியம் அதுவே தவறாக புரிந்து நபர்கள் எதுவுமே அறிந்திடாமல் ஒரு தொகையினை முதலீடு செய்து அதில் நட்டத்தையே சந்திக்கின்றனர்.
பொதுவாக நீங்கள் அதிக லாபத்தை ஈட்டினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் அதற்கு மாறாக நீங்கள் ஒரு நட்டத்தை சந்திக்கிறீர்கள் என்றால் அது மிகவும் மனதிற்கு கஷ்டத்தை அளிக்கக்கூடிய ஒரு செயலாகவே அமையும் நீங்கள் பங்கு சந்தைகளில் முதலீடு செய்யும் பொழுது அதற்குண்டான தகுதியினை பெற்ற பிறகு நீங்கள் முதலீடு செய்வது நல்லது.
வர்த்தகம் என்றால் என்ன?
வர்த்தகம் என்றால் என்ன? வர்த்தகம் என்பது கணக்கீடு என்பது ஆகும்.
பொதுவாகவே பெரிய வர்த்தகர்கள் என்றுமே பெரிய லாபத்தை ஈட்ட வேண்டும் என்ற ஆசியினாலே இந்த வர்த்தகத்தினை தொடங்குகிறார்கள் ஆனால் ஒருபோதும் நீங்கள் இந்த பெரிய ஆசினை மட்டுமே வைத்துக் கொண்டு எந்த ஒரு முன் அனுபவங்களும் பயிற்சியும் இல்லாமல் வர்த்தகத்தை தொடர முடியாது என்பது நிதர்சனமான உண்மை. நீங்கள் ஒரு நிறுவனத்தில் வர்த்தகங்களை தொடங்குகிறீர்கள் என்றால் நீங்கள் நிச்சயமாக அந்த நிறுவனத்தின் வர்த்தகங்களை பற்றி தெரிந்திருக்க வேண்டும் அவ்வாறு தெரிந்தால் மட்டுமே தான் நீங்கள் அந்தப் பங்குகளை வாங்கவோ வைக்கவோ சரியான கணிப்புக்குள் வர முடியும்.
நீங்கள் எப்பொழுதுமே ஒரு பங்குச் சந்தையில் நுழையப் போகிறீர்கள் என்றால் நீங்கள் பங்குச் சந்தையினை பற்றி பயிற்சியும் மற்றும் பொது அறிவும் நிச்சயமாக இருக்க வேண்டும். பெரும்பான்மையான மக்கள் தங்களுடைய சேமிப்பு பணத்தையே முதலீடாக செய்கின்றனர் அது தவறாகும் ஏனென்றால் நீங்கள் சேமிப்பு தொகையினை எடுத்து நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் அதில் லாபமும் நட்டமும் ஏற்பது உங்களுடைய விருப்பமே ஆகும் லாபம் கிடைக்கும் பட்சத்தில் நீங்கள் மகிழ்ச்சி அடையலாம் ஆனால் நீங்கள் நட்டத்தை ஈட்டும் பொழுது உங்களுக்கு இதனால் வரை சேமித்து வைத்த தொகை காணாமல் போய்விடும். பெரும்பான்மையான மக்கள் இந்த தவறை செய்கின்றனர் ஆனால் சில பேர் மட்டும் தான் தங்களிடம் இருக்கும் உபரியான பணத்தினை மட்டுமே முதலீடு செய்கிறார்கள் அதனால் அவர்களுக்கு அவர்களுடைய சேமிப்பு தொகை பத்திரமாக இருக்கும் இதுவே வர்த்தகம் ஆகும்.
பங்கு வர்த்தகம் சூதாட்டமா?
நீங்கள் எப்பொழுதுமே சூது சூதாட்டத்தினை விரும்பக் கூடாது அதன் மூலமாக பணம் ஈட்டி எங்கள் மீது மிகப்பெரிய பணக்காரர் ஆவது என்பது நிச்சயம் கிடையாது அதை நீங்கள் கண்டிப்பாக உணர வேண்டும் நீங்கள் ஒருவேளை சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு நீங்கள் ஒரு முறைக்கு இருமுறை பணத்தை நீங்கள் ஈட்டி இருக்கலாம் ஆனால் தொடர்ந்து அவ்வாறே நீங்கள் பணத்தினை பெற முடியாது வெற்றியும் அடைய முடியாது ஏனென்றால் அது சரியான ஒரு வழிமுறை அல்ல நீங்கள் மீண்டும் மீண்டும் சூதாட்டின்னல் மூலம் பணத்தினை பெற முடியும் என்று நினைத்துக் கொண்டு நீங்கள் சூதாடினால் நீங்கள் நிச்சயமாக தோல்வியை பெறுவீர்கள்.
நீங்கள் பங்குச்சத்தை பொறுத்தவரையில் நீங்கள் அதனை நீங்கள் சூதாட்டமாக எண்ணக்கூடாது அதற்கு மாறாக அது ஒரு விளையாட்டு என நினைக்க வேண்டும் நீங்கள் அந்த விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் சரியான பயிற்சியும் அனுபவம் உங்களுக்கு வேண்டும் ஒரு பங்கின் உடைய மதிப்பு எப்பொழுது அதிகரிக்கும் மற்றும் எப்பொழுது அது குறையும் என்பதை துல்லியமாக கணிக்கும் அளவிற்கு நீங்கள் உங்களுடைய பயிற்சியை மற்றும் அனுபவத்தை வைத்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் உங்களுடைய பங்குச் சந்தை விளையாட்டில் வெற்றியாளராக திகழ முடியும்.
பண மேலாண்மை – Money Management
நீங்கள் நிச்சயமாக தெரிந்து வைத்திருக்கும் கூடிய அவசியமான ஒன்றுதான் இந்த பண மேலாண்மை ஆகும் நீங்கள் பண மேலாண்மையை சரியாக பயன்படுத்தினால் தான் உங்களுடைய மூலாதனமான தொகையினை பாதுகாக்க முடியும் அதாவது புதிதாக வந்து பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நபர்கள் பெரிய தவறுகளை செய்கின்றனர் அது என்னவென்றால் அவர்கள் ஒரே வர்த்தகத்தில் மட்டும் தான் அவர்களுடைய பணத்தை முதலீடு செய்வதாகும் இது ஒரு சில நேரங்களில் பங்குகளின் மதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் அதிகப்படியான பணத்தை ஈட்டுவார்கள் அதற்கு மாறாக பங்குச் சந்தையில் பங்கின் விலை குறையும் பட்சத்தில் மிகப்பெரிய பண இழப்பை சந்திக்க நேரிடும் இதனால் சில சமயங்களில் தற்கொலை எண்ணமும் தோன்றும். எனவே பண மேலாண்மை எவ்வளவு அவசியம் என்பதை பற்றி இப்பொழுது பார்த்து புரிந்து கொண்டிருப்பீர்கள்.
பொதுவாக நீங்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்க நினைக்கும் பட்சத்தில் நீங்கள் உங்களுடைய முதலீட்டு முதலீட்டுத் தொகையில் வெறும் 10%
மட்டுமே நீங்கள் முதலீடு செய்ய வேண்டும்.
பங்குச் சந்தையில் ஒரு பங்கினை வாங்குகிறீர்கள் என்றால் அதில் லாபத்தினையும் நீங்கள் சம்பாதிக்கலாம் அல்லது மிகுந்த நஷ்டத்தினையும் நீங்கள் சம்பாதிக்கலாம் இது உங்களுடைய கையில் இருக்கும் நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றதாகும் லாபமும் இருக்கலாம் நட்டமும் இருக்கலாம் எனவே ஒரு பங்கின் முதலீடு என்பது மிகவும் முக்கியமானதாகும் அந்தப் பங்கு என்னுடைய வர்த்தக மற்றும் புள்ளி விவரங்களை வைத்து நீங்கள் பங்குகளை வாங்க விற்க முயல்வது நல்லது புதிய பங்குதாரர்கள் எப்பொழுதுமே அவர்களுடைய வருமானமான லாபத்தினை மட்டுமே எண்ணுகிறார்கள் அதற்கு மாறாக நஷ்டம் ஒன்று இருப்பதிலேயே அதை மறந்து விடுகின்றனர் நீங்கள் எப்பொழுதும் பங்குச்சந்தையில் ஈடுபடும் புதிய நபராக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய கவனத்தில் என்றுமே இருக்கக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் அது எப்பொழுது வேண்டுமானாலும் அதனுடைய திசையை மாற்றும்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எப்படி?
பெரும்பான்மையான மக்கள் உதவி குறிப்புகளை மட்டுமே நம்பி பல்லாயிரக்கணக்கான தொகையினை முதலீடு செய்கிறார்கள் மேலும் பிறவி ஆலோசனையை கேட்டும் முதலீடு செய்கிறார்கள் இது மிகப்பெரிய தவறாகும் ஏனென்றால் நாம் ஒருவருடைய அறிவுரையினையும் யாரோ ஒருவர் தொகுத்து வழங்கிய உதவி குறிப்புகளையும் பயன்படுத்தி ஒரு பங்கினை நாம் வாங்குகிறோம் என்றால் அதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறாகும். ஏனென்றால் நமக்கு பொதுவாக ஒரு பங்கினை வாங்குவதற்கும் விற்பதற்கும் உண்டான பொதுவான அறிவு கூட இல்லாமல் இருப்பது அதை கற்றுக் கொள்ளாமல் இந்த பங்குச் சந்தையில் முதலீடு செய்வது போன்றவை மிகவும் தவறானது ஆகும்.
நீங்கள் புதிதாக ஏதேனும் ஒரு பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குவது எப்படி அதில் என்னென்ன தவறுகள் அதில் எப்படி சதுரயமாக செயல்பட வேண்டும் போன்ற விஷயங்களுக்காக நீங்கள் ஒரு வழிகாட்டியினை தேர்வு செய்வது தவறு ஒன்றும் இல்லை. மேலும் நீண்ட நாட்களாக பங்குச் சந்தையில் திறம்பட செயல்படுபவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன் மூலம் கற்பதில் எந்த ஒரு தவறும் இல்லை பொதுவாக யாரோ ஒருவர் வெற்றியடைந்து விட்டார் பங்குச் சந்தையில் என்றால் அவர்களுடைய வெற்றியினையை நாம் பார்க்கிறோம். அதற்கு மாறாக அவர்களுடைய தோல்வியை முதலில் பார்க்க வேண்டும் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால்தான் நல்ல ஒரு அனுபவமாக இருக்கும் உங்களுக்கும்.
முதலில் நீங்கள் கேட்டுக் கொள்வது சரிதான் ஆனால் இதையே ஆயுட்காலம் முழுவதும் பின்பற்றக் கூடாது என்று நீங்கள் ஒரு பங்கினை சுயமாக முடிவு செய்து வாங்குகிறீர்கள் விற்பனை செய்கிறீர்கள் என்று கற்றுக் கொள்ளும் வரை நீங்கள் பெரிதாக முதலீடுகளை செய்வதை தவிர்க்க வேண்டும் கற்றுக் கொள்வது மிகவும் அவசியம் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி.
பங்குகளின் இழப்புகள் குறைப்பது அவசியம். (Averaging)
நண்பர்களே நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் நீங்கள் முதலீடு செய்யும் பங்குகள் நஷ்டத்தை நோக்கி செல்லாமல் இருப்பது போன்ற தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள் ஏனென்றால் இதன் மூலமாக நீங்கள் நஷ்டத்தை சந்திக்கிறீர்கள்.
நீங்கள் உங்களுடைய பங்குகளின் இழப்புகளை குறைப்பதற்கு மிகவும் கவனமாக செயல்படுவது அவசியம் இழப்புகளை சிறிதளவாக மாற்ற கற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் average என்ற ஒன்றினை மற்றும் பார்க்க வேண்டாம். நீங்கள் ஒரு நல்ல பங்கினை தேர்வு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அந்தப் பங்கு நஷ்டத்தினை நோக்கி நகரும் தருவாயில் நீங்கள் average செய்வது மிகவும் முக்கியமாகும் நீங்கள் பெரிய இழப்புகளை சந்திக்காமல் இருப்பதற்கு இது வழி வகை செய்யும் பொதுவாக பங்குச்சந்தை என்பது மிகவும் பெரிய வர்த்தகம் நீங்கள் இந்த வர்த்தகத்தை சரியான முறையில் ஈடுபட்டாலோ அல்லது முதலீடு செய்தாலோ மிகப்பெரிய லாபத்தினை எடுக்கலாம் அதற்கு மாறாக நீங்கள் தவறாக வர்த்தகம் செய்தீர்கள் என்றால் உங்கள் வாழ்நாள் முழுவதும் சேமித்த தொகை அனைத்துமே வீணாகிவிடும்.
பழிவாங்கும் வர்த்தகம் செய்யாதே
பழி வாங்கக்கூடிய வகையிலான வர்த்தகங்களை நீங்கள் நிச்சயமாக தவிர்க்க வேண்டும் இது எல்லா விதமான தவறுகளை விட மிகப் பெரிய தவறுவாகும் ஏனென்றால் நீங்கள் ஒரு பங்கினை வாங்கி விட்டீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் வாங்கும் பங்குகள் சரியான முறையில் செயல்படவில்லை எனவே நீங்கள் உங்களுடைய நட்டம் மற்றும் நஷ்டத்தை சந்திக்க விரும்பாமல் அந்தப் பங்கின் சார்பாக செய்த அனைத்து முதலீட்டையும் நீங்கள் விற்பனை செய்ய என்ன கூடாது இதை நீங்கள் யோசிக்காமல் செய்தால் மிகப்பெரிய நஷ்டத்தினை இயற்பியிர்கள்.
வர்த்தகத் திட்டத்தை வகுக்க வேண்டும்
என்றுமே அனுபவம் வாய்ந்த வர்த்தகர்கள் அவர்கள் உடைய சிறந்த வர்த்தக திட்டங்களின் அடிப்படையில் தான் பங்குச்சந்தையில் முதலீடுகளாகவோ அல்லது பங்குகள் விற்பனையிலோ கவனமாக செயல்படுகின்றனர் அதுமட்டுமில்லாமல் ஒரு பங்கின் மதிப்பு எப்பொழுது அதிகரிக்கும் எப்பொழுது குறையும் என்பதை அறிந்து அந்தப் பங்குகளில் முதலீடு செய்கின்றனர் சரியான நேரத்தில் பங்குகளை வாங்குவது சரியான நேரத்தில் பங்குகளை விற்பனை செய்வது போன்றவை அனுபவம் சாலிகள் மட்டும்தான் அப்பொழுது தான் அதிகப்படியான லாபத்தை ஈட்ட முடியும் என்று அவர்களுக்கு தங்கு தெரியும்.
இதற்கு மாறாக புதிதாக பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் இது போன்ற எந்த திட்டங்களையும் கடை பிடிக்காததன் காரணமாகவே நட்டத்தினை சந்திக்கிறார்கள் தவறான முதலீடுகளை செய்கின்றார்கள் என்றுமே ஒரு வங்கியில் முதலீடு செய்யும் பொழுது அதைப் பற்றிய அறிவும் புத்திசாலித்தனமும் இருக்க வேண்டும் ஒரு பங்கின் மதிப்பு எப்பொழுது உயரம் ஒரு பங்கின் மதிப்பு எப்பொழுது இறங்கும் என்ற புள்ளிவிவர கணக்குகளை நீங்கள் திட்டங்களாக வகுத்த பின்னரே நீங்கள் ஒரு சிறந்த வர்த்தகத்தினை செய்ய முடியும் எனவே நீங்கள் ஒரு வர்த்தகராக பயிற்சியும், தகுதியும் வளர்ந்து பிறகு நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது நல்லதாகும்.
நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக பார்த்தோம் எனவே நாங்கள் கூறியுள்ளது அனைத்துமே மிகவும் முக்கியமான குறிப்புகள் ஆகும் நீங்கள் நிச்சயமாக ஒரு பங்கினை வாங்குவது பற்றிய முழு அறிவினை பெரும் வரையில் நீங்கள் கற்றுக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை இது போன்ற பதிவில் அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் ஏதேனும் எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் பதிவை முழுமையாகப் படித்தமைக்கு நன்றி.