மகேந்திர பொருத்தம் – Mahendra Porutham Meaning In Tamil

Mahendra Porutham Meaning In Tamil – மகேந்திர பொருத்தம் என்றால் என்ன? மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா? ( what is Mahindra porutham in Tamil) போன்ற கேள்விகளுக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் பார்க்கலாம் வாருங்கள் நண்பர்களே பதிவுக்குள் செல்லலாம்.

மகேந்திர பொருத்தம் - Mahendra Porutham Meaning In Tamil
மகேந்திர பொருத்தம் – Mahendra Porutham Meaning In Tamil

மகேந்திர பொருத்தம் என்றால் என்ன – what is Mahindra porutham

திருமணம் பொருத்தம் மொத்தம் பத்து அதில் மூன்றாவதாக இருக்கும் பொருத்தமே மகேந்திர பொருத்தம் இந்த மகேந்திர பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்

பொதுவாக மகேந்திர பொருத்தம் குழந்தை பாக்கியத்தை இந்த திருமண தம்பதியினர் பெறுவார்களா மாட்டார்களா என்பதை பற்றி பார்க்கவும் அதில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதை பற்றி தெரிந்து கொள்ளவும் இந்த மகேந்திர பொருத்தம் பெரிதும் உதவுகிறது.

மேலும் தங்களுடைய சந்ததி விருத்தி அடையுமா? என்பதை கணிக்கவும் இந்த மகேந்திர பொருத்தம் பார்க்கப்படுகிறது மேலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆண் குழந்தையா இல்லை பெண் குழந்தையா என்பதை தெரிந்து கொள்ளவும் மகேந்திர பொருத்தம் உள்ளது சரியாக கனிக்கும் ஜோதிடர் அவர் உறுதியாக தனக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆண் அல்லது பெண் என்பதை இந்த மகேந்திரா பொருத்தத்தை வைத்து சொல்லிவிடுவார்.

மகேந்திர பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும்? 

மகேந்திர பொருத்தம் - Mahendra Porutham Meaning In Tamil
மகேந்திர பொருத்தம் – Mahendra Porutham Meaning In Tamil

மகேந்திர பொருத்தம் பார்ப்பது மிகவும் எளிது அதாவது நீங்கள் பெண் ஜாதகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் அந்த பெண் ஜாதகத்தில் பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் வரை வரிசையாக எண்ண வேண்டும் அப்படி எண்ணும் பொழுது உங்களுக்கு 4,7,10,13,16,19,22,25 என்ற எண்ணிக்கையில் வந்தால் அவர்களுக்கு மகேந்திர பொருத்தம் உண்டு இந்த முறையில் தான் மகேந்திர பொருத்தம் பார்க்க வேண்டும்.

2,3,5,6,8,9,11,12,14,15,17,18,19,20,21,23,24 என்ற எண்ணிக்கையில் வந்தால் மகேந்திர பொருத்தம் இல்லை என்று அர்த்தம். 

27 நட்சத்திரங்கள் வரிசை

  1. அஸ்வினி 
  2. பரணி
  3. கார்த்திகை
  4. ரோகினி 
  5. மிருகசீரிஷம்
  6. திருவாதிரை
  7. புனர்பூசம்
  8. பூசம்
  9.  ஆயில்யம்
  10.  மகம்
  11.  பூரம் 
  12.  உத்திரம் 
  13.  அஸ்தம் 
  14.  சித்திரை
  15.  சுவாதி 
  16.  விசாகம்
  17.  அனுஷம்
  18.  கேட்டயம்
  19.  மூலம் 
  20.  பூராடம் 
  21.  உத்திராடம் 
  22.  திருவோணம்
  23.  அவிட்டம்
  24.  சதயம் 
  25.  பூரட்டாதி
  26.  உத்திரட்டாதி 
  27.  ரேவதி

மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா? Mahendra Porutham Meaning In Tamil

Mahendra Porutham Meaning In Tamil – பொதுவாக 10 திருமண பொருத்தங்கள் மிகவும் முக்கியமானவை அவற்றில் அனைத்து பொருத்தங்களும் இருந்தால் மனதிற்கு இனிமையான நிகழ்வாகவே அது அமையும் இருப்பினும் பெரும்பான்மையானவர்களுக்கு பத்து பொருத்தங்களில் பொருத்தங்கள் சரிவர அமைவதில்லை. அவற்றில் முக்கிய திருமண பொருத்தங்கள் என்பவை சில உள்ளது அதை தவிர மீதம் உள்ள பொருத்தங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் தவறு ஒன்றும் இல்லை நமக்கு தேவையான அந்த முக்கியமான திருமண பொருத்தங்கள் இருந்தாலே திருமணம் செய்யலாம்.

மகேந்திர பொருத்தம் - Mahendra Porutham Meaning In Tamil
மகேந்திர பொருத்தம் – Mahendra Porutham Meaning In Tamil

மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா நிச்சயமாக திருமணம் செய்யலாம் ஏனென்றால் இது உத்திர பாக்கியத்தை குறிக்கும் எனவே நீங்கள் தினப்பொருத்தம் கன பொருத்தம் இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்து மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் நீங்கள் திருமணம் செய்யலாம்.

அப்படி இல்லை என்றால் விருச்ச பொருத்தம் பார்த்தும் திருமணம் செய்யலாம் உங்கள் ஜாதகத்தில் பொருத்தம் பார்க்கும் பொழுது விருச்ச பொருத்தம் இருந்தாலே நல்லது அது எதிர்கால சந்ததியினரை பற்றி கணிக்க உதவுகிறது.

உங்களுக்கு ஜாதகத்தில் முக்கியமான திருமண பொருத்தங்கள் இல்லை என்றாலும் நீங்கள் குரு பகவான் நட்சத்திரம் அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் நீங்கள் திருமணம் செய்தால் உங்களுடைய தோஷங்கள் பொருத்தங்கள் அனைத்தும் விலகி நல்ல ஒரு வாழ்க்கை அமையும்.

இந்த பதிவில் மகேந்திரன் பொருத்தம் பற்றி பார்த்தோம் (Mahendra Porutham Meaning In Tamil) மகேந்திர பொருத்தம் எவ்வாறு கணிப்பது மகேந்திர பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா மகேந்திர பொருத்த ப்படி பார்ப்பது என்பதை பற்றி விரிவாக பார்த்தோம் மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை அனைவரையும் வரவேற்கிறோம் நன்றி.

Pudhuulagam😍