ஸ்திரி தீர்க்க பொருத்தம் என்றால் என்ன? (shree dheerga porutham in tamil) ஸ்திரி தீர்க்கம் meaning – ஸ்திரி போகம், ஸ்திரி என்றால் என்ன? என்ற கேள்விகளுக்கு தெளிவாகவும் முழு விளக்கத்தை பார்க்கலாம் இப்பொழுது இந்தப் பதிவில் வாருங்கள்.
ஸ்திரி என்றால் என்ன?
ஸ்திரி என்றால் இது ஒரு வடமொழி சொல்லாகும் இந்த சொல்லிற்கு பொருள் என்பது பெண் ஆகும். இதற்கு நாம் தமிழில் விளக்கம் என்னவென்று பார்த்தால் முழுமையான என்ற அர்த்தத்தை தரும் இந்த சொல்.
இந்த ஸ்திரி தீர்க்கம் என்றால் ஒரு பெண்ணின் முழுமையான என்ற அர்த்தம் கிடைக்கிறது.
ஸ்திரி போகம் என்றால் என்ன?
இஸ்திரி போகம் என்பது ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையில் திருமணத்திற்கு பின்பு பெறக்கூடிய அனைத்து வகையான இன்பத்தை குறிப்பிடுவதை இஸ்திரி போகம் என்று சொல்வார்கள்.
ஸ்திரி தீர்க்க பொருத்தம் என்றால் என்ன?
பெயரே சொல்கிறது பெண்ணின் தீர்க்கும் அல்லது ஆயுள் ஆரோக்கியம் ஆணின் நட்சத்திரம் தொடர்பால் எவ்வித மாறுபாடு அடைகிறது என்பதை சொல்லும் இந்த பொருத்தம் பெண் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் 7 எனில் பொருத்தம் இல்லை ஏழுக்கு மேல் இருந்தால் தான் பொருத்தம் அதுவும் 13 வரை எனில் மத்தியமமான பொருத்தமே ஆகும் 13 க்கு மேல் என்றால் நல்ல பொருத்தம் ஆகும் இப்பொருத்தம் இல்லை என்றாலும் பெண் ஜாதகத்தில் ஆறாம் ஸ்தானம் அல்லது எட்டாம் ஸ்தானம் அல்லது ஆண் ஜாதகத்தில் பன்னிரெண்டாம் ஸ்தானம் அல்லது இரண்டாம் ஸ்தானம் பலம் பெற்றிருந்தால் திருமணம் செய்யலாம்.
பத்து திருமண பொருத்தங்களில் ஸ்திரி தீர்க்க பொருத்தம் ஒரு பெண் திருமணத்திற்கு பின்பு எம் மாதிரியான வாழ்க்கை நிலையை அடையப் போகிறாள் என்பதை பற்றி தெளிவாக பார்ப்பதற்கு இந்த இஸ்திக பொருத்தம் பெரிதும் பார்க்கப்படுகிறது.
பொதுவாக திருமணத்திற்கு ஆண் மற்றும் பெண்ணின் ஜாதகத்தை பார்ப்பது ஒரு பெண் இம்மாதிரியான வாழ்க்கையை அடையப் போகிறாள் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு தான் அதிலும் இந்த ஸ்திரி தீர்க்க பொருத்தம் மிகவும் உதவுகிறது.
இதில் மிகவும் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இது ஒரு பெண் தன்னுடைய இல்லற வாழ்க்கை அதாவது கணவனுடன் வாழும் வாழ்க்கை எம்மாரியான இன்பத்தை பெறுவாள் என்பதை பற்றி கணிப்பதற்காக மட்டுமே இந்தப் பொருத்தத்தை திருமணம் பொருத்தத்துடன் இணைத்துள்ளனர்.
ஸ்திரி தீர்க்க பொருத்தம் ஒரு பெண்ணின் உடைய ஆயுட்காலம் மற்றும் அவளது வாழ்க்கை பற்றியதாகும்.
ஸ்திரி தீர்க்க பொருத்தம் எவ்வாறு பார்ப்பது?
ஸ்திரி தீர்க்க பொருத்தம் பார்ப்பதற்கு ஒரு பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணி நட்சத்திரம் 7 நட்சத்திரங்கள் தாண்டி இருக்க வேண்டும் இதுவே எளிமையாக இந்த பொருத்தம் பார்ப்பது ஆகும்.
27 நட்சத்திரங்கள் வரிசை
- அஸ்வினி
- பரணி
- கார்த்திகை
- ரோகினி
- மிருகசீரிஷம்
- திருவாதிரை
- புனர்பூசம்
- பூசம்
- ஆயில்யம்
- மகம்
- பூரம்
- உத்திரம்
- அஸ்தம்
- சித்திரை
- சுவாதி
- விசாகம்
- அனுஷம்
- கேட்டயம்
- மூலம்
- பூராடம்
- உத்திராடம்
- திருவோணம்
- அவிட்டம்
- சதயம்
- பூரட்டாதி
- உத்திரட்டாதி
- ரேவதி
ஸ்திரி தீர்க்க பொருத்தம் இருந்தால் திருமணத்திற்கு பின்பு அந்தப் பெண் செல்வ செழிப்புடன் நிறைவான மனதுடன் ஒரு நல்ல வாழ்க்கையை அடைவாள் என்பதை பற்றியும் மேலும் அவளுடைய ஆயுட்காலம் நீண்டதாக இருக்கும் உடல் நலத்தில் மற்றும் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
READ MORE :
10 முக்கிய திருமண பொருத்தம் – சிறந்த திருமண பொருத்தம்
தினப் பொருத்தம் என்றால் என்ன? – Dina Porutham Meaning In Tamil
கணப் பொருத்தம் – Gana Porutham Meaning In Tamil
மகேந்திர பொருத்தம் – Mahendra Porutham Meaning In Tamil
ஸ்திரி தீர்க்க பொருத்தம் என்றால் என்ன? shree dheerga porutham
யோனி பொருத்தம் – Yoni Porutham
திருமண ராசி பொருத்தம் – rasi porutha in tamil
இந்தப் பதிவில் ஸ்திரி என்றால் என்ன ஸ்திரி போகம் என்றால் என்ன ஸ்திரி பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா? ஸ்திரி தீர்க்க பொருத்தம் எவ்வாறு பார்க்க வேண்டும்? என்பதை பற்றி விரிவாக பார்த்தோம் இதுபோன்ற தகவல்களை அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.