அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் – 109 Aathichudi In Tamil

(aathichudi in tamil) அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருப்பது அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் அவ்வையார் என்ற பெண்மணி பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் இவரை  இயற்றிய  நூல் ஆத்திச்சூடி ஆகும் இதில் 109 ஆத்திச்சூடி வரிகள் உள்ளது இது ஒவ்வொன்றும் இக்காலகட்ட மனிதர்கள் வரை எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் மிகவும் எளிமையான கருத்துக்கள் அடங்கியுள்ளது வாருங்கள் நண்பர்களே பதிவிற்குள் செல்லலாம் ஆத்திச்சூடி பாடல் வரிகள் மற்றும் ஆத்திச்சூடி பாடல் வரிகளின் பொருள்.

ஆத்திச்சூடி வரிகள் – aathichudi in tamil

அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் - 109 Aathichudi In Tamil
அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் – 109 Aathichudi In Tamil

அறஞ் செய விரும்பு

ஆறுவது சினம்

இயல்வது கரவேல்

ஈவது விலக்கேல்

உடையது விளம்பேல்

ஊக்கமது கைவிடேல்

எண் எழுத்து இகழேல்

ஏற்பது இகழ்ச்சி

ஐயம் இட்டு உண்

ஒப்புரவு ஒழுகு

ஓதுவது ஒழியேல்

ஔவியம் பேசேல்

அஃகஞ் சுருக்கேல்

கண்டு ஒன்று சொல்லேல்

ஙப் போல்வளை

சனி நீராடு

ஞயம் பட உரை

இடம் பட வீடு எடேல்

அறஞ் செய விரும்பு

ஆறுவது சினம்

இயல்வது கரவேல்

ஈவது விலக்கேல்

உடையது விளம்பேல்

ஊக்கமது கைவிடேல்

எண் எழுத்து இகழேல்

ஏற்பது இகழ்ச்சி

ஐயம் இட்டு உண்

ஒப்புரவு ஒழுகு

ஓதுவது ஒழியேல்

ஔவியம் பேசேல்

அஃகஞ் சுருக்கேல்

கண்டு ஒன்று சொல்லேல்

ஙப் போல்வளை

சனி நீராடு

ஞயம் பட உரை

இடம் பட வீடு எடேல்

இணககம்அறிந்து இணங்கு

தந்தை தாய்ப் பேண்

நன்றி மறவேல்

பருவத்தே பயிர் செய்

மண் பறித்து உண்ணேல்

இயல்பு அலாதன செயேல்

அரவம்ஆடேல்

இலவம் பஞ்சில் துயில்

வஞ்சகம் பேசேல்

அழகு அலாதன செயேல்

இளமையில் கல்

அரனை மறவேல்

அனந்தல் ஆடேல்

கடிவது மற

காப்பது விரதம்

கிழமைப் பட வாழ்

கீழ்மை அகற்று

குணமது கைவிடேல்

கூடிப்பிரியேல்

கெடுப்பது ஒழி

கேள்வி முயல்

கைவினை கரவேல்

கொள்ளை விரும்பேல்

கோதாட்டு ஒழி

கௌவை அகற்று

சக்கர நெறி நில்

சான்றோர் இனத்திரு

சித்திரம் பேசேல்

சீர்மை மறவேல்

சுளிக்கச் சொல்லேல்

சூது விரும்பேல்

செய்வன திருந்தச் செய்

சேரிடம் அறிந்து சேர்

சை எனத் திரியேல்

சொல் சோர்வு படேல்

சோம்பித் திரியேல்

தக்கோன் எனத் திரி

தானமது விரும்பு

திருமாலுக்கு அடிமை செய்

தீவினை அகற்று

துன்பத்திற்கு இடம் கொடேல்

தூக்கி வினை செய்

தெய்வம் இகழேல்

தேசத்தோடு ஒத்து வாழ்

தையல் சொல் கேளேல்

தொண்மை மறவேல்

தோற்பன தொடரேல்

நன்மை கடைப்பிடி

நாடு ஒப்பன செய்

நிலையில் பிரியேல்

நீர் விளையாடேல்

நுண்மை நுகரேல்

நூல் பல கல்

நெல் பயிர் விளை

நேர்பட ஒழுகு

நைவினை நணுகேல்

நொய்ய உரையேல்

நோய்க்கு இடம் கொடேல்

பழிப்பன பகரேல்

பாம்பொடு பழகேல்

பிழைபடச் சொல்லேல்

பீடு பெற நில்

புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

பூமி திருத்தி உண்

பெரியாரைத் துணைக் கொள்

பேதமை அகற்று

பையலோடு இணங்கேல்

பொருள்தனைப் போற்றி வாழ்

போர்த் தொழில் புரியேல்

மனம் தடுமாறேல்

மாற்றானுக்கு இடம் கொடேல்

மிகைபடச் சொல்லேல்

மீதூண் விரும்பேல்

முனைமுகத்து நில்லேல்

மூர்க்கரோடு இணங்கேல்

மெல்லி நல்லாள் தோள் சேர்

மேன் மக்கள் சொல் கேள்

மை விழியார் மனை அகல்

மொழிவது அற மொழி

மோகத்தை முனி

வல்லமை பேசேல்

வாது முற்கூறேல்

வித்தை விரும்பு

வீடு பெற நில்

உத்தமனாய் இரு

ஊருடன் கூடி வாழ்

வெட்டெனப் பேசேல்

வேண்டி வினை செயேல்

வைகறைத் துயில் எழு

ஒன்னாரைத் தேறேல்

ஓரம் சொல்லேல்

அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் – 109 Aathichudi In Tamil

அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் - 109 Aathichudi In Tamil
அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் – 109 Aathichudi In Tamil

ஆத்திசூடி வரிகள் பொருள் – full aathichudi in tamil with meaning

ஆத்திச்சூடி விளக்கம் உயிர்  வருக்கம்

அறஞ் செய விரும்பு

அறஞ் செய விரும்பு  meaning – அறம் செய்ய விரும்பு என்பது நீங்கள் தர்மம் செய்ய ஆசைப்பட வேண்டும் என்று அர்த்தம்.

ஆறுவது சினம்

ஆறுவது சினம் meaning – ஆறுவது சினம் என்பது நீங்கள் நிச்சயமாக கோபத்தினை குறைக்க வேண்டும் என்று அர்த்தம்.

இயல்வது கரவேல்

இயல்வது கரவேல் meaning – இயல்வது கரவேல் என்பது உங்களால் தானம் செய்யக்கூடிய பொருளை மறைத்து வைக்க கூடாது ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த பொருட்கள் தானம் செய்ய வேண்டும் என்பது ஆகும்.

ஈவது விலக்கேல்

ஈவது விலக்கேல் meaning – ஈவது விளக்கில் என்றால் ஒருவர் பிறர்க்கு ஒரு தர்மத்தினை செய்யும் பொழுது அதை எக்காரணம் கொண்டும் அதை தடுக்கக்கூடாது ஒருவர் மற்றொருவருக்கு செய்யும் உதவி ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர அதை இகழ்ந்து அந்த உதவியை செய்யாமல் போகும் அளவிற்கு செய்யக் கூடாது.

உடையது விளம்பேல்

உடையது விளம்பேல் meaning – உடையது விளம்பேல் என்றால் உங்களிடம் உள்ள பொருள் அல்லது ஏதேனும் ரகசியங்கள் இருந்தால் அதை பிறர் தெரிந்து கொள்ளும் அளவிற்கு சொல்லக் கூடாது காட்டிக் கொள்ளக் கூடாது.

உன்னுடைய சிறப்புகளை பலர் தெரிந்து கொள்ளும் அளவிற்கு பெருமையாக பேசக்கூடாது

உன்னுடைய பலவீனத்தை பலர் அறியும்படி யாரிடமும் சொல்லக்கூடாது இது அவ்வளவு நல்லதல்ல இதனால் எந்த ஒரு நல்ல பயனும் உங்களுக்கு கிடைக்கப் போவதில்லை.

ஊக்கமது கைவிடேல்

ஊக்கமது கைவிடேல் meaning – நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் எப்பொழுதும் முயற்சி என்பது இருந்து கொண்டே இருக்க வேண்டும் நீங்கள் ஒருபோதும் முயற்சி என்பதை கைவிடவே கூடாது என்று அர்த்தம்.

எண் எழுத்து இகழேல்

எண் எழுத்து இகழேல் meaning – கல்வியில் என்னும் எழுத்தும் மிகவும் முக்கியமானதாகும் எனவே நீங்கள் அவற்றை கற்றுக் கொள்வது வீணென்று நினைத்து கற்றுக் கொள்ளாமல் இருந்து விடாதீர்கள் என்று அர்த்தம்.

ஏற்பது இகழ்ச்சி

ஏற்பது இகழ்ச்சி meaning – நீங்கள் யார் ஒருவரிடத்திலும் யாசிக்க கூடாது என்று அர்த்தமாகும் அது ஒரு  இகழ்ச்சி தரக்கூடிய ஒரு செயலாகும்.

ஐயம் இட்டு உண்

ஐயம் இட்டு உண் meaning – நீங்கள் ஒரு உடல் ஊனமுற்றோர் அல்லது உணவு இல்லாமல் இருப்பவர்களுக்கு நீங்கள் உணவு கொடுத்து விட்டு தான் நீங்கள் உணவு உண்ண வேண்டும் என்று அர்த்தம்.

ஒப்புரவு ஒழுகு

ஒப்புரவு ஒழுகு meaning – நீங்கள் உலக நடைமுறை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும் பின்பு அதன்படி வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

ஓதுவது ஒழியேல்

ஓதுவது ஒழியேல் meaning – நீங்கள் எப்பொழுதுமே நல்ல அர்த்தங்களை தரக்கூடிய நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் என்று அர்த்தம்

ஔவியம் பேசேல்

ஔவியம் பேசேல் meaning – நீங்கள் ஒருவர் மீது பொறாமை கொண்டு பேச கூடாது என்று அர்த்தம்.

அஃகஞ் சுருக்கேல்

அஃகஞ் சுருக்கேல்  meaning – நீங்கள் அதிகமாக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து உங்களுடைய பொருட்களின் அதாவது தானியங்களின் எடையை குறைத்து விற்பனை செய்யாதே என்று அர்த்தம்.

உயிர் மெய் வருக்கம்

அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் - 109 Aathichudi In Tamil
அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் – 109 Aathichudi In Tamil

கண்டு ஒன்று சொல்லேல்

கண்டு ஒன்று சொல்லேல் meaning – நீங்கள் ஒரு பொழுதும் பொய் சாட்சி சொல்ல கூடாது என்று அர்த்தம்

ஙப் போல்வளை

ஙப் போல்வளை meaning – ங என்ற எழுத்து எப்படி ஙா என்ற எழுத்து வரிசை உருவாவதற்கு உதவுகிறதோ அதுபோல நாம் அனைவருமே நம்மைச் சார்ந்தவர்கள் மற்றும் சுற்றி இருப்பவர்களுக்கு அவர்களை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று அர்த்தம். 

சனி நீராடு

சனி நீராடு meaning – நீங்கள் சனிக்கிழமை தோறும் என்னை தேய்த்து குளிக்க வேண்டும் என்று அர்த்தம்.

ஞயம் பட உரை

ஞயம் பட உரை  meaning – ஒருவர் உங்களுடன் பேசும் பொழுது கேட்பவருக்கு இனிமையாக உணர வேண்டும் உங்களுடைய பேச்சு அவ்வாறு நீங்கள் பேச வேண்டும் என்று அர்த்தம். 

இடம் பட வீடு எடேல்

இடம் பட வீடு எடேல் meaning – உங்களுடைய வீட்டை உங்களுடைய தேவைக்கேற்றவாறு கட்டிக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

இணககம்அறிந்து இணங்கு

இணககம்அறிந்து இணங்கு meaning – நீங்கள் ஒருவருடன் நட்பு கொள்ளும் பொழுது அவருடைய குணம் நல்ல குணமா என்று தெரிந்து அவருடன் பழக வேண்டும் என்று அர்த்தம்.

தந்தை தாய்ப் பேண்

தந்தை தாய்ப் பேண் meaning – உங்களுடைய தாய் தந்தையை நீங்கள் அவர்களுடைய இறுதிக்காலம் வரை அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

நன்றி மறவேல்

நன்றி மறவேல் meaning – யாரேனும் ஒருவர் உங்களுக்கு செய்த உதவியை நீங்கள் மறக்காமல் இருக்க வேண்டும் என்று அர்த்தம். 

பருவத்தே பயிர் செய்

பருவத்தே பயிர் செய் meaning – நீங்கள் ஏதேனும் ஒரு செயல் செய்யும் பட்சத்தில் அந்த செயல் சரியான காலத்தில் செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

மண் பறித்து உண்ணேல்

மண் பறித்து உண்ணேல் meaning – நீங்கள் பிறருடைய இடம் மற்றும் நிலத்தை ஏமாற்றி அதன் மூலம் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை வாழக்கூடாது என்று அர்த்தம்.

இயல்பு அலாதன செயேல்

இயல்பு அலாதன செயேல் meaning – நீங்கள் ஒரு நாளும் நல்ல ஒழுக்கத்திற்கு மாற்றான செயல்களை ஒருபொழுதும் செய்யக்கூடாது என்று அர்த்தம்.

அரவம்ஆடேல்

அரவம்ஆடேல் meaning – நீங்கள் பாம்புகளைப் பிடித்து அதனுடன் விளையாடக்கூடாது என்று அர்த்தம்.

இலவம் பஞ்சில் துயில்

இலவம் பஞ்சில் துயில் meaning – நீங்கள் இலவம் பஞ்சு நாள் செய்யப்பட்ட படுக்கையினை பயன்படுத்த வேண்டும் அதிலே உறங்க வேண்டும் என்று அர்த்தம். 

வஞ்சகம் பேசேல்

வஞ்சகம் பேசேல் meaning – நீங்கள் உண்மைக்கு புறம்பான கவர்ச்சியை தரமான வார்த்தைகளை பேசாதே என்று அர்த்தம்.

அழகு அலாதன செயேல்

அழகு அலாதன செயேல் meaning – இழிவான செயல்களை செய்யக்கூடாது என்று அர்த்தம்.

இளமையில் கல்

இளமையில் கல் meaning – அதாவது ஒரு குழந்தை இளம் பருவத்தில் கற்க வேண்டிய அனைத்தையும் தவறாமல் கற்பது மிகவும் முக்கியம் என்று அர்த்தம்.

அரனை மறவேல்

அரனை மறவேல் meaning – உங்களுடைய மனைவி எப்பொழுதும் தர்மத்தையே நினைக்க வேண்டும் என்று அர்த்தம்

அனந்தல் ஆடேல்

அனந்தல் ஆடேல் meaning – அதிகமாக தூங்காமல் இருக்க வேண்டும்.

கடிவது மற

கடிவது மற meaning – யாரையுமே கோபத்தில் மனது புண்படும்படி பேசக்கூடாது.

காப்பது விரதம்

காப்பது விரதம் meaning –  நாம் ஆரம்பித்த தர்மத்தை என்றுமே விடாமல் செய்யும் செயலே விரதம் ஆகும்

கிழமைப் பட வாழ்

கிழமைப் பட வாழ்  meaning – என்றுமே பிறருக்கு நன்மை செய்து வாழ வேண்டும்

கீழ்மை அகற்று

கீழ்மை அகற்று meaning –  இழிவான குணம் செயலை நீக்க வேண்டும்

குணமது கைவிடேல்

குணமது கைவிடேல் meaning –  நீங்கள் நன்மை தரக்கூடிய குணங்களை என்றுமே கை விடக்கூடாது என்று அர்த்தம்

கூடிப்பிரியேல்

கூடிப்பிரியேல்  meaning – நீங்கள் நல்லவரோடு நட்பு ஏற்பட்ட பின்பு நீங்கள் ஒரு பொழுதும் அவரை விட்டு பிரிய கூடாது.

கெடுப்பது ஒழி

கெடுப்பது ஒழி meaning –  பிறருக்கு கேடுகளை ஏற்படுத்தும் செயல்களை செய்யக்கூடாது.

கேள்வி முயல்

கேள்வி முயல் meaning –  நன்கு கற்றவர் சொல்லும் நுட்பொருளை கேட்டு தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்.

கைவினை கரவேல்

கைவினை கரவேல் meaning –  நன்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து மறைக்காமல் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தம்.

கொள்ளை விரும்பேல்

கொள்ளை விரும்பேல் meaning –  பிறருடைய பொருளினை பெறுவதற்கு ஆசைப்படக்கூடாது.

கோதாட்டு ஒழி

கோதாட்டு ஒழி meaning –  குற்றமாக இருக்கும் அனைத்து விளையாட்டுகளையும் விட்டு விட வேண்டும் என்று அர்த்தம்.

கௌவை அகற்று

கௌவை அகற்று meaning –  வாழ்க்கையில் ஏற்படும் செயற்கையான துன்பங்களை நீக்கி விட வேண்டும்.

சகர வருக்கம்

அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் - 109 Aathichudi In Tamil
அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் – 109 Aathichudi In Tamil

சக்கர நெறி நில்

சக்கர நெறி நில் meaning –  தர்ம நெறிமுறைகளின் படி வாழ வேண்டும் என்று அர்த்தம்

சான்றோர் இனத்திரு

சான்றோர் இனத்திரு meaning –  நீங்கள் அறிவு ஒழுக்கங்கள் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று அர்த்தம்

சித்திரம் பேசேல்

சித்திரம் பேசேல் meaning –  பொய்யான விஷயங்களை மெய்யான விஷயங்கள் போல் பேசாதே என்று அர்த்தம்.

சீர்மை மறவேல்

சீர்மை மறவேல் meaning –  அதாவது புகழுக்கு காரணமான குணநலன்களை மறைத்து விடாதே என்று அர்த்தம்

சுளிக்கச் சொல்லேல்

சுளிக்கச் சொல்லேல் meaning –  நீங்கள் பேசும் பொழுது கேட்பவருக்கு விருப்பம் கோபமும் உண்டாகும்படி பேசக்கூடாது என்று அர்த்தம்.

சூது விரும்பேல்

சூது விரும்பேல் meaning –  ஒருபொழுதும் சூதாட்டத்தை மட்டும் விரும்பாதே என்று அர்த்தம்.

செய்வன திருந்தச் செய்

செய்வன திருந்தச் செய் meaning –  செய்யும் செயல்களில் குறைவும் தவறுகளும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

சேரிடம் அறிந்து சேர்

சேரிடம் அறிந்து சேர் meaning –  நீங்கள் ஒருவருடன் பழகும் பொழுது அவர் நல்ல குணங்களை உடையவரா? என்று தெரிந்து பழக வேண்டும்.

சை எனத் திரியேல்

சை எனத் திரியேல் meaning –  பெரியோர்கள் நம்மை வெறுக்கும் படியான விஷயங்களை செய்து கொண்டே இருக்காதே என்று அர்த்தம்.

சொல் சோர்வு படேல்

சொல் சோர்வு படேல் meaning –  நீங்கள் பிறரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் உங்களை அறியாமல் மறந்து கூட தவறு உண்டாகும்படி பேசி விடாதே என்று அர்த்தம்.

சோம்பித் திரியேல்

சோம்பித் திரியேல் meaning –  நீங்கள் சோம்பேறியாக இருக்காதீர்கள் என்று அர்த்தம்

தகர வருக்கம்

அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் - 109 Aathichudi In Tamil
அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் – 109 Aathichudi In Tamil

தக்கோன் எனத் திரி

தக்கோன் எனத் திரி meaning –  அதாவது பெரியோர்கள் உங்களை நல்லவன் யோக்கியன் என்று புகழக்கூடிய வகையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

தானமது விரும்பு

தானமது விரும்பு meaning –   வேண்டுபவர்களுக்காக மட்டும் தானம் செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

திருமாலுக்கு அடிமை செய்

திருமாலுக்கு அடிமை செய் meaning –  இறைவன் நாராயணமூர்த்தி அவர்களுக்கு மட்டும் தொண்டு செய் என்று அர்த்தம்.

தீவினை அகற்று

தீவினை அகற்று meaning –  பாவச் செயல்களை செய்யாமல் இருக்க வேண்டும் மேலும் பாவ செயல்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.

துன்பத்திற்கு இடம் கொடேல்

துன்பத்திற்கு இடம் கொடேல் meaning –  நீங்கள் ஒரு செயல் செய்யும் பொழுது வரும் துன்பத்தை கண்டு பயந்து அதனை பாதியில் விட்டு விடக்கூடாது என்று அர்த்தம்.

தூக்கி வினை செய்

தூக்கி வினை செய் meaning –  உபாயம் என்னவென்று தெரிந்த பிறகு அந்த காரியத்தை தொடங்க வேண்டும் என்று அர்த்தம்

தெய்வம் இகழேல்

தெய்வம் இகழேல் meaning –  கடவுளை பழித்துப் பேச கூடாது என்று அர்த்தம்

தேசத்தோடு ஒத்து வாழ்

தேசத்தோடு ஒத்து வாழ் meaning –  நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை போன்ற விஷயங்கள் இல்லாமல் கூடி சேர்ந்து வாழ வேண்டும் என்று அர்த்தம்.

தையல் சொல் கேளேல்

தையல் சொல் கேளேல் meaning –  மனைவியின் பேச்சைக் கேட்டு அதனை தெரிந்து கொள்ளாமல் ஆராயாமல் நடக்காது என்று அர்த்தம்.

தொண்மை மறவேல்

தொண்மை மறவேல் meaning –  பழமையான விஷயங்களை மறக்காமல் இருக்க வேண்டும்.

தோற்பன தொடரேல்

தோற்பன தொடரேல் meaning –  நீங்கள் செய்யும் செயல் நிச்சயமாக தோல்வியில்தான் முடியும் என்றால் அந்த செயலை தொடங்காதே என்று அர்த்தம்.

நகர வருக்கம்

அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் - 109 Aathichudi In Tamil
அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் – 109 Aathichudi In Tamil

நன்மை கடைப்பிடி

நன்மை கடைப்பிடி meaning –  நீங்கள் ஒரு நல்ல செயலை செய்யும் பொழுது எவ்வளவு இடையூறுகள் உங்களுக்கு வந்தாலும் அதை நீங்கள் உறுதியாக செய்ய வேண்டும்

நாடு ஒப்பன செய்

நாடு ஒப்பன செய் meaning –  நாட்டு மக்கள் ஒத்துக் கொள்ளக்கூடிய காரியங்களை செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

நிலையில் பிரியேல்

நிலையில் பிரியேல் meaning –  உங்களுடைய நல்ல நிலைமையில் இருந்து நீங்கள் என்றுமே தாழ்ந்து போக கூடாது என்று அர்த்தம்.

நீர் விளையாடேல்

நீர் விளையாடேல் meaning –  நீங்கள் வெள்ளப்பெருக்கில் நீந்தி விளையாடுவது போன்ற காரியங்களைச் செய்யக்கூடாது என்று அர்த்தம்.

நுண்மை நுகரேல்

நுண்மை நுகரேல் meaning –  நமக்கு நோய்களை தரும் சிற்றுண்டிகளை அதிகமாக சாப்பிடாதே என்று அர்த்தம்.

நூல் பல கல்

நூல் பல கல் meaning –  அறிவை வளர்க்கக்கூடிய நூல்களைப் படிக்க வேண்டும் என்று அர்த்தம்.

நெல் பயிர் விளை

நெல் பயிர் விளை meaning –  உணவு தானியமான நெட்பைரினை விலைய செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

நேர்பட ஒழுகு

நேர்பட ஒழுகு meaning –  நீங்கள் ஒழுக்கம் தவறாமல் நேர்மையான வழியில் வாழ வேண்டும் என்று அர்த்தம்.

நைவினை நணுகேல்

நைவினை நணுகேல் meaning –  நீங்கள் வருத்தம் தரக்கூடிய தீமைகளை பிறருக்கு செய்யாதே என்று அர்த்தம்.

நொய்ய உரையேல்

நொய்ய உரையேல் meaning –  அற்பமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசாதே என்று அர்த்தம்.

நோய்க்கு இடம் கொடேல்

நோய்க்கு இடம் கொடேல் meaning –  உறக்கம் மற்றும் உணவு ஆகியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யக்கூடாது என்று அர்த்தம்.

பகரவருக்கம்

அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் - 109 Aathichudi In Tamil
அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் – 109 Aathichudi In Tamil

பழிப்பன பகரேல்

பழிப்பன பகரேல் meaning –  பயனில்லாத சொற்கள் கடும் சொற்கள் போன்றவை பேசக்கூடாது என்று அர்த்தம்.

பாம்பொடு பழகேல்

பாம்பொடு பழகேல் meaning –  பாம்பை போன்ற கொடிய குணம் கொண்டவர்களுடன் பழகாதே என்று அர்த்தம்.

பிழைபடச் சொல்லேல்

பிழைபடச் சொல்லேல் meaning –  குற்றங்கள் மற்றும் தவறுகள் உண்டாகும் படியான எதையுமே நீங்கள் பேசாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தம்.

பீடு பெற நில்

பீடு பெற நில் நீங்கள் meaning –  பெருமையை அடையக்கூடிய நிலையில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று அர்த்தம்.

புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

புகழ்ந்தாரைப் போற்றி வாழ் meaning –  நம்பியவர்களை என்றுமே ஆதரித்து வாழ வேண்டும் என்று அர்த்தம்.

பூமி திருத்தி உண்

பூமி திருத்தி உண் meaning –  நீங்கள் நிலத்தை உழுது பயிர் செய்து அதை உண்ண வேண்டும் என்று அர்த்தம்.

பெரியாரைத் துணைக் கொள்

பெரியாரைத் துணைக் கொள் meaning –  நீங்கள் அறிவில் சிறந்த மிகவும் சான்றோர் பெருமக்களே உங்களுக்கு துணையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

பேதமை அகற்று

பேதமை அகற்று meaning –  அறியாமையை போக்க வேண்டும் என்று அர்த்தம்.

பையலோடு இணங்கேல்

பையலோடு இணங்கேல் meaning –  அறிவில்லாத சிறுவர்களோடு கூடி திரியக்கூடாது என்று அர்த்தம்.

பொருள்தனைப் போற்றி வாழ்

பொருள்தனைப் போற்றி வாழ் meaning –  வீண் செலவு செலவுகள் செய்யாமல் நீங்கள் வாழ வேண்டும் என்று அர்த்தம்.

போர்த் தொழில் புரியேல்

போர்த் தொழில் புரியேல் meaning –  யாருடனும் யாருக்காவது கழகம் செய்யாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தம்.

மகர வருக்கம்

அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் - 109 Aathichudi In Tamil
அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் – 109 Aathichudi In Tamil

மனம் தடுமாறேல்

மனம் தடுமாறேல் meaning –  எந்த ஒரு சூழ்நிலையிலும் மனக்கழகம் அடையாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தம்

மாற்றானுக்கு இடம் கொடேல்

மாற்றானுக்கு இடம் கொடேல் meaning –  பகைவர்கள் உன்னை வெல்வதற்கு நீங்கள் இடம் கொடுக்காதே என்று அர்த்தம்

மிகைபடச் சொல்லேல்

மிகைபடச் சொல்லேல் meaning –  சாதாரண விஷயங்களை நீங்கள் உயர்ந்த வார்த்தைகளால் பெரிதாக கூறக்கூடாது என்று அர்த்தம்

மீதூண் விரும்பேல்

மீதூண் விரும்பேல் meaning –  அளவுக்கு அதிகமாக உண்ணுதலை செய்யாதே என அர்த்தம்

முனைமுகத்து நில்லேல்

முனைமுகத்து நில்லேல் meaning –  போர் முனைகளில் நிற்கக்கூடாது என்று அர்த்தம்

மூர்க்கரோடு இணங்கேல்

மூர்க்கரோடு இணங்கேல் meaning –  மூர்க்க குணம் கொண்டவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும் என்று அர்த்தம்.

மெல்லி நல்லாள் தோள் சேர்

மெல்லி நல்லாள் தோள் சேர் meaning –  பிற பெண்மணிகளை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று அர்த்தம்.

மேன் மக்கள் சொல் கேள்

மேன் மக்கள் சொல் கேள் meaning –  நல்லொழுக்கம் கொண்ட சான்றோர்கள் சொல்வதை மட்டுமே கேள் என்று அர்த்தம்.

மை விழியார் மனை அகல்

மை விழியார் மனை அகல் meaning –  விலைமாந்தருடன் உறவுகள் வைத்துக் கொள்ளாமல் விலகி நிற்க வேண்டும் என்று அர்த்தம்

மொழிவது அற மொழி

மொழிவது அற மொழி meaning –  நீங்கள் சொல்லும் சொல்லை எந்த ஒரு பயமும் இன்றி வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று அர்த்தம்.

மோகத்தை முனி

மோகத்தை முனி meaning –   வாழ்க்கையில் நிலையே இல்லாத பொருட்களின் மீதுள்ள ஆசைகளை விட்டு விட வேண்டும் என்று அர்த்தம்.

வகர வருக்கம் 

அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் - 109 Aathichudi In Tamil
அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் – 109 Aathichudi In Tamil

வல்லமை பேசேல்

வல்லமை பேசேல் meaning –  உங்களுடைய சாமர்த்திய தனத்தை நீங்களே புகழ்ந்து பேசக்கூடாது என்று அர்த்தம்

வாது முற்கூறேல்

வாது முற்கூறேல் meaning –  பெரியவர்களுடன் நீங்கள் முந்திக்கொண்டு அவர்களிடம் வாதாட கூடாது என்று அர்த்தம்.

வித்தை விரும்பு

வித்தை விரும்பு meaning –  கல்வியாகிய நட்பொருளை விரும்ப வேண்டும் என்று அர்த்தம்.

வீடு பெற நில்

வீடு பெற நில் meaning –  நீங்கள் முக்தியை பெறுவ கூடிய சன்மார்க்கத்திலேயே நடந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தம். 

உத்தமனாய் இரு

உத்தமனாய் இரு meaning – உயர்ந்த குணங்களைக் கொண்டவனாக நீங்கள் வாழ வேண்டும் என்று அர்த்தம்.

ஊருடன் கூடி வாழ்

ஊருடன் கூடி வாழ் meaning – ஊர்க்காரர்களுடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ வேண்டும் என்று அர்த்தம்.

வெட்டெனப் பேசேல்

வெட்டெனப் பேசேல் meaning –  யாருடனும் வெட்டு கத்தி போல கடினமாக பேசக்கூடாது என்று அர்த்தம்.

வேண்டி வினை செயேல்

வேண்டி வினை செயேல் meaning –  வேண்டுமென்றே தீமையான செயல்களை செய்யாதே என்று அர்த்தம்.

வைகறைத் துயில் எழு

வைகறைத் துயில் எழு meaning –  அன்றாடமும் சூரியன் உதிக்கும் முன்பாகவே நீங்கள் தூக்கத்திலிருந்து எழ வேண்டும் என்று அர்த்தம்.

ஒன்னாரைத் தேறேல்

ஒன்னாரைத் தேறேல் meaning –  பகைவர்களை நம்ப கூடாது என்று அர்த்தம்

ஓரம் சொல்லேல்

ஓரம் சொல்லேல் meaning –  எந்த ஒரு வழக்குகளிலும் ஒரு தலைப்பட்சம் பேசாமல் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தம். 

அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் - 109 Aathichudi In Tamil
அவ்வையார் ஆத்திச்சூடி பாடல் வரிகள் பொருள் – 109 Aathichudi In Tamil

நண்பர்களே இந்த பதிவில் நாம் ஆத்திச்சூடி பாடல் வரிகள் ஔவையார் ஆத்திச்சூடி பாடல் வரிகளின் பொருள் உயிர் வர்க்கம் கரகவர்க்கும் சரகவர்க்கம் தரகவர்க்கும் நகர வருக்கம் பகரவருக்கம் அகரவருக்கம் போன்றவற்றைப் பார்த்தோம் இது போன்ற பதிவுகளை அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி ஏதேனும் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.

Pudhuulagam😍