Kanavu Palangal in Tamil – (What is the benefit of seeing a dead father in a dream? – இறந்த அப்பா கனவில் வந்தால் என்ன பலன்)அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் கனவு பலன்கள் பதிவில் இறந்த அப்பா கனவில் வந்தால் என்ன பலன் என்பதைப் பற்றி பார்க்க இருக்கிறோம் அதற்கு முன்பாக அப்பா என்பவர் நம்முடன் வாழ்ந்தவர் மேலும் நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார் அவர் ஏதேனும் காரணம் தான் இருந்திருக்கலாம் அவர் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாகவும் சில சமயங்களில் அவர்கள் உங்களுடைய கனவில் தோன்றலாம் இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் இறந்த அப்பா கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி நிச்சயமாக தெரிந்து கொள்வது அவசியம் நண்பர்களே.
பொதுவாகவே அனைத்து கனவுகளுமே உங்களுக்கு ஒரு முக்கியமான எதிர்காலம் பற்றிய அறிவினை போதிக்கவே வருகிறது இதனை நாம் கண்டுகொள்ளாத அதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக இருக்க முடிவதில்லை அது ஆபத்தான கனவாகவும் இருக்கலாம் அல்லது மகிழ்ச்சியான கனமாகவும் இருக்கலாம் எனவே நீங்கள் ஒவ்வொரு கனவுகளுக்கும் அதற்குண்டான தெளிவான பலன்களை நீங்கள் பெரும் பட்சத்தில் உங்களுடைய எதிர்காலம் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்பட முடியும்.
கனவுகளைப் பொறுத்தவரை நீங்கள் நடு இரவில் காணும் கனவுகள் ஒரு வருடத்திற்குள்ளாக அதனுடைய பலனை தந்தே தீரும் நீங்கள் அதற்குப் பிறகு காணும் கனவுகள் அதாவது மூன்று மணியிலிருந்து நான்கு மணிக்குள் காணும் கனவு அதனுடைய பலன் ஆறு மாதத்தில் இருந்து தரும் என்கின்றனர் மேலும் நீங்கள் அதிகாலையில் காணும் கனவு பத்து நாட்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் அதனுடைய பலனை தரும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை
வாருங்கள் நண்பர்களே இப்பொழுது நாம் பதிவுக்குள் போவோம்
இறந்த அப்பா கனவில் அழுவது போன்று கனவு வந்தால் என்ன பலன் – Kanavu Palangal in Tamil
பொதுவாக இறந்த அப்பாவை நாம் கனவில் காணும் பொழுது மிகவும் கஷ்டமாக இருக்கும் ஆனால் இப்படிப்பட்ட கனவு நீங்கள் காண்கிறீர்கள் என்றால் அது ஏதேனும் உங்கள் தந்தை சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை என்பதை குறிக்கும் மேலும் உங்களுடைய தந்தைக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் ஆன்மீக பரிகாரங்கள் திதி போன்றவை சரிவர செய்துள்ளீர்களா என்று யோசித்துக் கொள்ளுங்கள் அப்படி ஏதேனும் நீங்கள் தவறும் பட்சத்தில் அதை நிச்சயமாக நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.
இறந்த அப்பா கனவில் பேசுவது போன்ற கனவு கண்டால் என்ன பலன். Kanavu Palangal in Tamil
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் இறந்த தந்தை கனவில் வந்து உங்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல அல்லது பேசுவது போல நீங்கள் கனவுகளை கண்டிருக்கும் பட்சத்தில் நல்ல ஒரு கனவாக இக்கனவு அமையும் என்கின்றனர் மேலும் இது உங்களுடைய வாழ்வில் பல்வேறு விதமான நிலைகளில் ஏற்படப் போகும் மகிழ்ச்சி மற்றும் தனவரவு போன்றவற்றை குறிக்கிறது நீங்கள் வரும் காலங்களில் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய அனைத்து சூழ்நிலைகளும் உருவாக கூடும் என்பதை உணர்த்த இது மாதிரியான கானங்கள் வருகிறது.
நீண்ட நாட்கள் ஆக உங்கள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏதேனும் நடக்காமல் இருந்திருக்கும் பட்சத்தில் உங்கள் இறந்த அப்பாவிடம் பேசுவது போல் கனவுகளை கண்டிருந்தால் நிச்சயமாக சுப நிகழ்ச்சிகள் கூடியவர்கள் உங்கள் இல்லத்தில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதை இம்மாதிரியான கனவுகள் உணர்த்துகிறது.
இறந்த அப்பாவை தேடுவது போல கனவு வந்தால் என்ன பலன் – Kanavu Palangal in Tamil
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் இறந்து போன தன்னுடைய அப்பாவை நீங்கள் தேடிக் கொண்டிருப்பது போல கனவுகளை நீங்கள் கண்டுள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம் அவ்வாறு நீங்கள் காணும் கனவு உங்களுடைய இன்றைய காலகட்ட சூழ்நிலையை குறிப்பிடுகிறது பொதுவாக நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்த இம்மாதிரியான கனவுகள் வருகிறது மேலும் நீங்கள் செய்யும் செயல்களில் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் கோபங்களை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்தவே இம்மாதிரியான கனவுகள் உங்களுக்கு வருகிறது.
இறந்த தந்தை உயிருடன் இருப்பது போல் கனவு – Kanavu Palangal in Tamil
நம்மளுடைய தந்தை இறந்துள்ளார் என்ற நிலையில் நீங்கள் உங்களுடைய அப்பாவை உங்களுடைய கனவில் உயிருடன் பார்க்கிறீர்கள் என்றால் இது மனதிற்கு இனிமையான கனவாகவே அமைகிறது மேலும் இது அவர்களுடைய அனுக்கிரகனை உங்களுக்கு எப்பொழுதும் உள்ளது என்பதை உணர்த்த இம்மாதிரியான கனவுகள் வருகிறது மேலும் இம்மாதிரியான கனவு காண்பவர் உடைய ஆயுட்காலம் நன்றாக இருக்கும் என்பதை உணர்த்தவும் நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் தேவையற்ற வீண் கவலைகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில் அது அனைத்துமே கடந்து போகும் உங்கள் கவலைகள் அனைத்தும் நீங்கும் என்பதை குறிப்பிடுகிறது இந்த கனவு கடவுள் அனுக்கிரகனை நிச்சயமாக உங்களுக்கு உள்ளது என்பதை குறிப்பிடவே இறந்த தந்தை உயிருடன் பார்ப்பது போல் கனவுகள் உங்களுக்கு வருகிறது.
நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் (இறந்த அப்பா கனவில் வந்தால் என்ன பலன் – Kanavu Palangal in Tamil)இறந்த அப்பா கனவில் வந்தால் என்ன பலன் என்பதை விரிவாக பார்த்தோம் மேலும் இது போன்ற கனவுப் பலன்கள் அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் மேலும் இந்தப் பதிவினை முழுமையாக படித்தமைக்கு நன்றி மீண்டும் வருக.