உணவுப் பொருட்கள் கனவில் கண்டால் என்ன பலன்?

உணவுப் பொருட்கள் கனவில் கண்டால் என்ன பலன் – food dream benefits in Tamil – (சாப்பாடு கனவில் வந்தால் – food kanavu palangal in tamil )வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்தப் பதிவில் உணவுப் பொருட்களை கனவில் கண்டால் என்ன மாதிரியான பலன்களை கனவு காண்பவர் பெறப்போகிறார் என்பதை பற்றி முழு விளக்கத்துடனும் விரிவாகவும் பார்க்கலாம்.

Table of Contents

உணவுப் பொருட்கள் கனவில் கண்டால் என்ன பலன்.

உணவுப் பொருட்கள் கனவில் கண்டால் என்ன பலன்
உணவுப் பொருட்கள் கனவில் கண்டால் என்ன பலன்

பந்தியில் சாப்பிடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் நீங்கள் ஏதேனும் வீட்டு விசேஷம் அல்லது பொதுவான விசேஷங்களில் கலந்து கொள்ளும் பொழுது நீங்கள் பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுவது போல் கனவுகளை நீங்கள் கண்டிருந்தால் உங்களுக்கு உடைய பணவரவுகள் தாராளமாக வந்து சேரும் மேலும் நீங்கள் நீண்டலாக ஆசைப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகம் ஏற்படக்கூடும் மேலும் செல்வ வளம் சிறப்பாக இருக்கும் என்பதை உணர்த்தவே நீங்கள் பந்தியில் சாப்பிடுவது போல கனவுகள் வருகிறது.

READ MORE >>சோறு கனவில் வந்தால் என்ன பலன்?

உணவு உண்பது போல் கனவு வந்தால் என்ன பலன்.

நீங்கள் உங்களுடைய கனவில் உணவு உண்பது போன்ற கனவுகளை நீங்கள் கண்டிருந்தால் நீங்கள் செய்யும் தொழிலில் அதிக லாபம் பெறலாம் என்றும் ஏதேனும் நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு காத்திருந்தால் அந்த வேலை உங்களுக்கு கிடைக்கும் மேலும் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கு உண்டான அதிக வாய்ப்புகள் உள்ளது நீங்கள் உங்களுடைய கனவில் உணவுகளை ஒன்பது போன்ற கனவுகளை நீங்கள் கண்டிருந்தால் உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த திருமணத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலகி திருமணம் நல்ல முறையில் நடக்கும்.

இறைச்சி சாப்பிடுவது போல் கனவு

உங்களுடைய கனவில் நீங்கள் இறைச்சி சம்பந்த உணவுகளை நீங்கள் ஒன்பது போல் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு கூடிய விரைவில் உடல் நல கோளாறுகள் அதிகம் வர வாய்ப்புள்ளது எனவே உங்கள் உணவு முறையில் சற்று கவனம் தேவை மேலும் உடல்நலத்தில் அக்கறை தேவை என்பதை உணர்த்தவே கனவில் இறைச்சி சாப்பிடுவது போன்ற கனவுகள் உங்களுக்கு ஏற்படுகிறது.

இறந்த மீன் கனவில் வந்தால் என்ன பலன்.

இறந்த மீன் கனவில் வந்தால்- 

நீங்கள் உங்களுடைய கனவில் கருவாட்டை கனவில் கண்டாலோ அல்லது மீனை கனவில் கண்டாலோ உங்களுக்கு இதனால் வரையில் ஏற்பட்டிருந்த பகைவர் தொல்லை இனி வரும் காலங்களில் நீங்கும் பகைவர்கள் மற்றும் எதிரிகள் காணாமல் போவார்கள் என்பதை உணர்த்தவே இறந்த மீனை கருவாட்டினை கனவில் காண்பீர்கள்.

அரிசி சோறு கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தினமும் அரிசி சோறு சம்பந்தமான கனவு வந்திருந்தால் கூடிய விரைவில் ஏதேனும் உடல்நல குறைபாடு மற்றும் நோய் ஏற்படக்கூடும் என்பதை உணர்த்தவே அரிசி சோறு கனவில் வருகிறது.

அரிசி கனவில் வந்தால் என்ன பலன்

உணவுப் பொருட்கள் கனவில் கண்டால் என்ன பலன்
உணவுப் பொருட்கள் கனவில் கண்டால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் அரிசி அல்லது அரிசி சம்பந்தமான கனவுகளை கண்டிருந்தால் நீங்கள் செய்யும் தொழிலில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகி தொழிலில் நல்ல லாபம் ஈட்டலாம் என்பதை குறிக்கவே இம்மாதிரியான கனவுகள் வருகிறது.

காரமான உணவு வகைகளை கனவில் கண்டால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் காரசாரமான உணவு வகைகளை கனவில் கண்டால் நீங்கள் இதுவரை உழைத்த உழைப்புக்கு கூடிய விரைவில் நல்ல பலனை ஈட்டப் போகிறீர்கள் என்று அர்த்தம் மேலும் உங்களுடைய தனவரவு திருப்தி தரும்.

டீ குடிப்பது போல கனவு வந்தால் என்ன பலன்.

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் டீ குடிப்பது போன்ற கனவு வந்திருந்தால் அவர் கூடிய விரைவில் ஏதேனும் ஒரு நல்ல நண்பரை சந்திப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்த்தவே இம்மாதிரியான கனவுகள் வருகிறது.

காபி குடிப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்.

நீங்கள் உங்களுடைய கனவில் காபி குடிப்பது போன்ற கனவுகளை நீங்கள் கண்டிருந்தால் உங்களை தேடி ஒரு நல்ல நண்பர் வரக்கூடும் மேலும் அவர் மூலமாக ஒரு நல்ல செய்தி உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தவே காபி குடிப்பது போன்ற கனவுகள் உங்களுக்கு ஏற்படுகிறது.

கோதுமை கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் கோதுமை அரிசி போன்ற தானிய வகைகளை கனவில் கண்டிருந்தால் அவருக்கு ஏற்படவிருக்கும் செல்வ செழிப்பு பொருளாதார நிலை அதிகரிக்கும் என்பதை பற்றி உணர்த்தவே கோதுமை போன்ற தானியங்கள் உங்கள் கனவில் வருகிறது.

READ MORE>>கனவு பலன்கள் விலங்குகள் – Dream benefits animals

முட்டை கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் முட்டை சம்பந்தமான கனவுகள் வந்தால் உங்களுடைய வாழ்க்கை மற்றும் தொழிலில் இருந்து வந்த பணப்புழக்கம் தடைகள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது மேலும் வறுமை ஏற்படக்கூடிய காலகட்டமாக அமையப்போகிறது என்பதை குறிப்பிடவே முட்டை சம்பந்தமான கனவுகள் உங்களுக்கு வருகிறது.

உப்பு கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் உப்பு சம்பந்தமான கனவுகளை கண்டிருந்தால் அவருக்கு நற்பெயர் ஏற்படும் மேலும் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும் அதிக பண வரவு ஏற்படும் என்பதை உணர்த்தவே உப்பு சம்பந்தமான கனவுகளை நீங்கள் காண்கிறீர்கள்.

தயிர் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்.

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தயிர் மற்றும் பால் சம்பந்தமான கனவுகள் வந்திருந்தால் உங்கள் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் ஏற்பட போகிறது என்பதை குறிக்கும் மேலும் தனவரவு அதிகரிக்கும் என்பதை உணர்த்தவே தயிர் உங்கள் கனவில் வருகிறது.

வெள்ளம் கனவில் வந்தால் என்ன பலன்

நீங்கள் உங்களுடைய கனவில் வெள்ளம் 9 போல் கனவு கண்டால் கூடிய விரைவில் உங்களுக்கு வறுமையான சூழ்நிலை ஏற்படப் போகிறது என்பதை குறிக்கும் எனவே வெள்ளம் கனவில் வந்தால் வறுமை ஏற்படும்.

பருப்பு வகைகளை கனவில் வந்தால் என்ன பலன்

பருப்பு வகைகளை கனவில் காண்பது என்பது ஒரு நல்ல கனவாகும் ஏனென்றால் இதனால் வரை இருந்து வந்த எதிரி தொல்லை அனைத்தும் நீங்க பெரும் எனவே உங்களை உங்களுடைய எதிரிகள் புரிந்து கொள்வார்கள்.

புளிப்பான உணவுகளை கனவில் கண்டால் என்ன பலன்.

உணவுப் பொருட்கள் கனவில் கண்டால் என்ன பலன்
உணவுப் பொருட்கள் கனவில் கண்டால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் புளிப்பு சம்பந்தமான உணவு பண்டங்களை கனவில் கண்டால் அவருக்கு இறுதி நாள் வரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்க கூடும் என்பதை குறிக்கிறது.

பட்டாணி கனவில் கண்டால் என்ன பலன்.

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் பட்டாணி கனவில் வந்தால் வீட்டில் ஏதேனும் நல்ல விஷயங்கள் மற்றும் சுப காரியங்கள் நடக்கப் போகிறது என்பதை குறிக்கும் குடும்ப உறுப்பினர்களிலேயே சந்தோஷம் மன சூழ்நிலை ஏற்படும் என்பதை உணர்த்தவே பட்டாணி உங்கள் கனவில் வருகிறது.

ரொட்டி கனவில் வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் ரொட்டி சாப்பிடுவது போல் கனவுகளை கண்டிருந்தால் உங்களுடைய தன வரவு குறையப்போகிறது என்பதை குறிக்கவே இமாதிரியான ரொட்டி கனவுகள் வருகிறது.

சூடான உணவுகளை கனவில் கண்டால் என்ன பலன்.

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் சூடான உணவுப் பொருட்களை உண்பது போன்ற கனவு வந்திருந்தால் கூடிய விரைவில் நீங்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடந்து அந்த காரியம் வெற்றி அடையப் போகிறது என்பதை உணர்த்த இம்மாதிரியான கனவுகள் வருகிறது.

பாயாசம் கனவில் வந்தால் என்ன பலன்

பாயாசம் எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பரிமாறப்படும் ஒரு உணவு ஆகும் அந்த பாயாசத்தை உங்கள் கனவில் கண்டால் கனவு காண்பதற்கு கூடிய விரைவில் நல்ல காரியங்கள் நடைபெறும் என்பதை குறிப்பிடுகிறது.

பால் குடிப்பது போன்ற கனவு வந்தால் என்ன பலன்.

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் பால் குடிப்பது போன்ற கனவுகளை கண்டிருந்தால் கூடிய விரைவில் செல்வ செழிப்பு நற்பெயர் ஏற்படப்போகிறது என்று அர்த்தம்.

இஞ்சி கனவில் வந்தால் என்ன பலன்.

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் இஞ்சி மற்றும் இஞ்சி சார்ந்த ஏதேனும் பொருட்கள் கனவில் வந்திருந்தால் கூடிய விரைவில் உடல்நல கோளாறு ஏற்படப் போகிறது என்பதை குறிக்க இஞ்சி கனவில் வருகிறது.

இனிப்பு கனவில் கண்டால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் இனிப்பு சம்பந்தமான உணவு பண்டங்களை கனவில் கண்டிருந்தால் இது நாள் வரை இருந்து வந்த துன்பங்கள் மற்றும் துக்கங்கள் அனைத்தும் விலகி வாழ்க்கையில் நல்ல செய்திகள் வரப்போகிறது மகிழ்ச்சியாக மாறும் காலகட்டம் அமையப்போகிறது என்று அர்த்தம்.

ஏலக்காய் கனவில் வந்தால் என்ன பலன்

நீங்கள் உங்கள் கனவில் ஏலக்காய் கனவில் கண்டால் நாலு பேர் மதிக்கும் அளவிற்கு நீங்கள் உயரப் போகிறீர்கள் என்று அர்த்தம் நற்பெயர் உண்டாகும்.

அதிகப்படியான செல்வத்தை ஈட்டும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என்பதை உணர்த்தவே ஏலக்காய் மற்றும் ஏலக்காய் சாப்பிடுவது போன்ற கனவுகள் உங்களுக்கு ஏற்படுகிறது.

உணவுப் பொருட்கள் கனவில் கண்டால் என்ன பலன்
உணவுப் பொருட்கள் கனவில் கண்டால் என்ன பலன்

மட்டன் சாப்பிடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்

கனவு காண்பவர் தங்களுடைய கனவில் மட்டன் சாப்பிடுவது போல் கனவு அல்லது சிக்கன் சாப்பிடுவது போல் கனவு வந்தால் கூடிய விரைவில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்பதை குறிக்கவே இம்மாதிரியான கனவுகள் வருகிறது.

Pudhuulagam😍