
எத்தனை அவுன்ஸ் ஒரு கப்?
ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ்?
ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ்
Ounce Meaning in Tamil

பொதுநலம்.காம் வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.. அவுன்ஸ் அப்படினா என்னவென்று தெரியுமா? அவுன்ஸ் என்பது ஒரு அலகு முறையாகும். இவற்றை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். அதற்கு முதன் ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ் என்றால் கேள்வி மக்களிடம் அதிகம் எழுந்துள்ளது அதனை என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

அவுன்ஸ் என்றால் என்ன?
அவுன்சு, அவுன்ஸ் அல்லது ஔன்சு என்பது மெட்ரிக் முறையைச் சேராத ஒரு சிறிய எடை அலகு. ஒரு பவுண்டு நிறை (mass) எடையில் பதினாறில் ஒரு பங்கு. ஒரு அவுன்சு = 1/16 பவுண்டு. இவ் அலகு முன்னிருந்த பிரித்தானிய பேரரசிய (இம்ப்பீரியல்) முறையைச் சேர்ந்த ஓர் அலகு. தற்காலத்தில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. எடையைக் குறிக்கும் அவுன்சு என்னும் இதே பெயர் சிறு சிறு எடை வேறுபாடுகளுடன் பயன்பாட்டில் உள்ளது. பொதுவாக அவுன்சு என்று குறிக்கப்படுவது அனைத்துலக அவெடிபாய்சு (avoirdupois) அவுன்சு என்பதாகும். இது ஏறத்தாழ 28.35 கிராம் எடை உடையது. இது தவிர வேறு பல அவுன்சுகளில் டிராய் அவுன்சு என்பது 31.1 கிராம் எடை உள்ளது. டிராய் அவுன்சு என்பதை “டி அவு” என்னும் சுருக்கெழுத்துகளால் குறிக்கப்பெறும்.

ஒரு கப்புக்கு எவ்வளவு அவுன்ஸ்?
சராசரியாக, ஒரு உலர் கப் 6.8 US உலர் அவுன்ஸ். ஒரு கப் 16 தேக்கரண்டி சமம் 8 அவுன்ஸ்.
விடை: 8 அவுன்ஸ்.

Ounce Meaning in Tamil