அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் என்ன பார்க்க இருக்கிறோம் என்றால் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி? என்பதை பற்றி தான் பொதுவாக புறம்போக்கு நிலம் என்பது யாரும் பயன்படுத்தாமல் இருக்கக்கூடிய ஒரு நிலமாகும் இந்த நிலத்திற்கு பட்டா எப்படி வாங்குவது என்பதை பற்றி தெரிந்துகொள்ள வாருங்கள் பதிவுக்குள் செல்லலாம்.
பொதுவாகவே அனைத்து விதமான புறம்போக்கு நிலங்களும் அரசாங்கத்திற்கு சொந்தமானவை ஆகும் இவை அரசாங்கம் பொதுவான விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும் அது மட்டுமல்லாது அரசுக்கு ஏதேனும் ஒரு பயன்பாடு இருக்கும் பட்சத்தில் அந்த பொறம்போக்கு நிறங்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளும்.
இந்த நிலங்களில் வேளாண்மை செய்ய முடியாத நிலங்கள் மற்றும் ஆறுகள் குளங்கள் சாலைகள் போன்றவை புறம்போக்கு நிலங்களில் சேரும்.
இது போன்ற இடங்களுக்கு எப்படிப்பட்ட வாங்குவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
புறம்போக்கு நிலம் பெயர் வர காரணம்
பொதுவாகவே வருவாய்த் துறைக்குள் வராத நிலங்கள் இருந்தால் அது புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றனர் இதற்கு காரணம் அதை யாரும் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?
புறம்போக்கு நிலங்களில் பட்டா பெறலாம் யார் ஒருவர் புறம்போக்கு நிலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தி வருகிறார்கள் அல்லது வைத்திருக்கிறார்களோ அவர்களே அந்த புறம்போக்கு நிலத்தினை வைத்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டு அன்று தெரிவித்துள்ளது.
அரசு புறம்போக்கு நிலங்கள் இரண்டு வகைகளாக உள்ளது
பொதுவாக இரண்டு விதமான புறம்போக்கு நிலங்கள் உள்ளது
அட்சேயபனையுள்ள புறம்போக்கு நிலம் Objectionable Poramboke
அச்சேபனை இல்லாத புறம்போக்கு நிலம் Un Objectionable Poramboke
ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம் – Un Objectionable Poramboke
அச்சேபனை இல்லாத புறம்போக்கு நிலம் என்பதை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் பொதுவாக புறம்போக்கு நிலங்களில் பரிசு நிலம் புஞ்சை நிலம் நத்தம் நிலம், நஞ்சை நிலம் போன்ற வகைகள் உள்ளது இதில் நத்தம் என்பது மக்கள் தங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்ற அல்லது வசித்துக் கொண்டிருக்கின்ற பகுதியாகும் இந்த நிலங்களில் நீங்கள் பட்டா பெறலாம் இந்த இடங்களுக்கு பட்டா எவ்வாறு பெறலாம் என்றால் நீங்கள் அரசிடம் விண்ணப்பம் வைக்கலாம் ஆனால் இம்மாதிரியான இடங்களுக்கு பட்டா வழங்குவது முழுக்க முழுக்க அரசின் முடிவு. அரசாங்கத்திற்கு இந்த இடம் பயன்பாட்டிற்கு தேவை என்று கருதினால் அவர்கள் பட்டா நிச்சயமாக வழங்க மாட்டார்கள்.
அட்சேயபனையுள்ள புறம்போக்கு நிலம் – Objectionable Poramboke
ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலத்தில் பட்டா பெறுவது என்பது நிச்சயமாக கிடையாது ஏனென்றால் இது இயற்கையான குலம் வாய்க்கால் குட்டை கம்மாய் ஏரி போன்ற நீர்வழி தடங்கள் ஆகும் இதைத்தான் ஆட்சபனை உள்ள புறம்போக்கு நிலம் என்று கூறுகின்றோம் ஒருபோதும் அரசாங்கம் இயற்கையான குளம் வாய்க்கால் குட்டை நீர்நிலைகள் போன்றவற்றிற்கு பட்டா பெறுவதற்கு அனுமதிக்காது நீங்கள் ஆற்றுபனை உள்ள புறம்போக்கு நிலங்களை வாங்குவதரும் மேலும் அதற்கு பட்டா கோருவதும் கூடாது அப்படி நீங்கள் பட்டா வேண்டும் என்று கேட்டால் உங்களுடைய கோரிக்கை நிச்சயமாக நிராகரிக்கப்படும்.
பொதுவாக புறம்போக்கு நிலங்களை நாம் இணையதளம் வாயிலாக பார்க்க முடியும் இ சர்வீஸ் ( Eservices)என்ற இணையதளத்திற்கு சென்று அங்கு உங்களுடைய ஊர் கிராமம் தாலுகா ஆகியவற்றை கொடுக்க வேண்டும் அவ்வாறு கொடுத்த பின்பு அதற்கு நிலத்தின் விவரங்கள் மற்றும் உட்பிரிவுகள் கொடுக்க வேண்டும் பிறகு உங்களுடைய வேண்டுகோள்களை காண்பிக்கப்படும்.
நண்பர்களே நாம் இந்த பதிவில் புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி என்பதை பற்றி பார்த்தோம் இது போன்ற பயனுள்ள தகவல்களை அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கின்றோம் பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி.