(Turmeric Side Effects In Tamil – மஞ்சள் தீமைகள் – மஞ்சள் அதிகம் சாப்பிட்டால் – Manjal Side Effects In Tamil)
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் நீங்கள் மஞ்சள் அதிகம் சாப்பிட்டால் எம் மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியும் மேலும் மஞ்சள் தீமைகள் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
நாம் அனைவருமே தினசரி வாழ்க்கையில் உணவு சமைப்பதற்கு மஞ்சளை பயன்படுத்துகிறோம் மேலும் மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியாகவும் நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய குணத்தையும் கொண்டுள்ளது. என்னதான் மஞ்சளின் மூலமாக பல நன்மைகள் இருந்தாலும் மஞ்சளின் மூலமாக சில தீமைகளும் இருக்கிறது இன்றைய பதிவில் மஞ்சள் தீமைகள் பற்றி பார்க்கலாம்.
மஞ்சள் தீமைகள் -Manjal Side Effects In Tamil
ஈரல் பிரச்சனையை உண்டாக்கும் மஞ்சள்
நாம் அளவுக்கு அதிகமான மஞ்சள் உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு ஈரல் சம்பந்தமான பிரச்சனைகளை நிச்சயமாக ஏற்படுத்தும் எனவே அதிகப்படியான மஞ்சளை உணவில் எடுத்துக் கொள்வது அவ்வளவு நல்லது அல்ல. ஈரல் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் உணவில் அதிகப்படியான மஞ்சளை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.எனவே ஈரல் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கும் மஞ்சள்
பல பேருக்கு இரும்பு சத்து குறைபாடுகள் இருக்கலாம் அதற்கு காரணம் மஞ்சளும் ஒன்றாக இருக்கும் ஏனென்றால் நாம் அதிகப்படியான உணவுகளில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதன் காரணமாக இரும்புச் சத்தை உறிஞ்சும் காரணிகளை அதன் வேலைகளை செய்ய விடாமல் இந்த மஞ்சள் தடுக்கிறது அதனால் தான் நமக்கு இரும்பு சத்து குறைபாடுகள் நம் உடலில் ஏற்படுகிறது எனவே மஞ்சள் தேவையான அளவு பயன்படுத்தினால் அது நன்றாக இருக்கும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் ஆபத்துதான்.
சிறுநீரகம் மஞ்சள் தீமைகள்
பொதுவாகவே சிறுநீரகம் சரிவர செயல்பட்டால் தான் நமது உடம்பு நோய் நொடி இல்லாமல் இருக்கும் ஆனால் நீங்கள் மஞ்சளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதன் காரணமாக சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும் அபாயம் உள்ளது எனவே மஞ்சள் தேவைக்கு ஏற்றால் போன்று பயன்படுத்தி வர வேண்டும்.
மஞ்சளில் உள்ள ஆக்சைடுகள் கால்சியம் கரைக்காத காரணத்தினால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுகிறது எனவே சிறுநீரக சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் மஞ்சளை தவிர்ப்பது நல்லது அளவாக எடுத்துக் கொண்டால் நல்லது.
வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் மஞ்சள்.
வயிறு சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளான வயிற்றுப்போக்கு குமட்டல் உணவு செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்றவை வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஆகும் இதற்கு ஒரு காரணமாக அமைவது மஞ்சள் தான் எவ்வாறென்றால் மஞ்சளில் குறுக்கு மீன் என்ற பொருள் வயிற்றில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க கூடும் எனவே வயிறு சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் தயவு செய்து மஞ்சளை தேவைக்கு ஏற்ப போன்று பயன்படுத்துவது நல்லது அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை மனதில் வைத்துக் கொள்வது நல்லது.
அலர்ஜியை ஏற்படுத்தும் மஞ்சள்
அலர்ஜி உள்ளவர்கள் நீங்கள் உங்களுடைய உணவில் மஞ்சள் குறைவான அளவை பயன்படுத்த வேண்டும் ஒரு சிலருக்கு அலர்ஜி போன்ற பதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
பித்தப்பை பிரச்சினைகளை உண்டாக்கும் மஞ்சள்
மஞ்சள் நீங்கள் அதிகப்படியாக உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது பித்தப்பையில் கற்கள் ஏற்படவும் அதிகம் வாய்ப்புள்ளது இவ்வாறு பித்தப்பை பிரச்சினை உள்ளவர்கள் நீங்கள் மேலும் மேலும் அஞ்சலை அதிகப்படியாக எடுத்துக் கொண்டே வந்தால் பித்தப்பை இன்னும் மோசமாக சூழ்நிலையில் காணப்படும் மஞ்சள் பயன்படுத்துவதால் பித்தப்பை பிரச்சினை ஏற்படுவதும் மஞ்சளின் பக்க விளைவுகளில் ஒன்றாகும்.
Read More >> சோற்று கற்றாழை பயன்கள் | Aloe Vera Benefits Tamil
கர்ப்பிணி பெண்களை பாதிக்கும் மஞ்சள்
கர்ப்பிணி பெண்கள் மஞ்சளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் கர்ப்பப்பையில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் இவ்வாறு என்றால் கர்ப்பப்பை சீக்கிரம் சுருங்கும் மேலும் இதன் மூலமாக கரு தங்கும் நிலைமையை மிகவும் மோசப்படுத்துகிறது இந்த மஞ்சள் பொதுவான கருத்து என்னவென்றால் தங்களது குழந்தைகள் வெள்ளையாக பிறக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பெரும்பாலான பெண்கள் மஞ்சளை பாலில் கலந்து குடிக்கிறார்கள் அதனால் தான் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினைகள் விழுகிறது எனவே மஞ்சள் தேவையான அளவிற்கு மட்டுமே பயன்படுத்தி வர வேண்டும்
மலட்டு தன்மையை ஏற்படுத்தும் மஞ்சள்
பொதுவாக மஞ்சளை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது இனப்பெருக்க மண்டலத்தில் பாதிப்புகள் எழவும் வாய்ப்பு உள்ளது எனவே மஞ்சளை சரிவர தேவையான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும் பெரும்பான்மையான ஆண்கள் மஞ்சளை உட்கொள்ளும் பொழுது அவர்களுக்கு விந்தணு உற்பத்தி குறைய கூடும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள் இதனால் குழந்தையின்மை மலட்டுத்தன்மை போன்ற பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படுகிறது.
இன்று நாம் இந்த பதிவில் மஞ்சளின் தீமைகள் பற்றி விரிவாக பார்த்தோம் தேவையான அளவு மஞ்சளை பயன்படுத்தினால் நமக்கு நல்லது தேவைக்கு அதிகமாக சென்றால் எந்த ஒரு விஷயமாகவும் இருந்தாலும் அது ஆபத்தில் தான் முடியும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் மேலும் இது போன்ற தகவல்களை பெற நாங்கள் உங்களுக்கு இருக்கிறோம் பதிவை முழுமையாக படித்தமைக்கு நன்றி.