மனையடி சாஸ்திரம் || manaiyadi sasthiram

மனையடி சாஸ்திரம் || manaiyadi sasthiram

மனையடி சாஸ்திரம் || manaiyadi sasthiram

பொதுவாக மனையடி சாஸ்திரம் என்பது ஒரு மனையில் கட்டப்படும் வீட்டின் அகல நீளம் எவ்வளவு இருக்க வேண்டும்? எந்த அகல நீளத்தில் வீட்டின் அறைகள் இருந்தால் என்ன பலன்கள் உண்டாகும்? வீட்டில் சுவர்கள் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும்? இப்படி வீட்டின் அளவை குறித்து முழுமையாக விளக்குவதே மனையடி சாஸ்திரம். இங்கு நாம் 6 அடியில் தொடங்கி 100 அடி வரை வீடு மற்றும் அதன் அறைகளின் அளவு இருந்தால் அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பற்றியும், வீட்டின் சுவர் எவ்வளவு உயரம் இருந்தால் என்ன பலன் என்பது பற்றியும் விரிவாக பார்ப்போம். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில், நல்ல பலன்கள் தரும் எண்களை கொண்டு வீடு மற்றும் அதன் அறைகளின் அகல நீளத்தை அமைப்பது சாலச்சிறந்தது.

மனையடி சாஸ்திரம் (Manaiyadi sastram in Tamil)

அகலம், நீளம் பலன்

6 அடி வீட்டில் நன்மை உண்டாகும்.

7 அடி தரித்திரம் பீடிக்கும்.

8 அடி எண்ணியவை ஈடேறும், பகை நீங்கும், தொட்டது துலங்கும்.

9 அடி ஆயுள் குறையும், சலிப்புகள் உண்டாகும்.

10 அடி கால்நடை செல்வம் பெருகும். வேளாண்மை செழிக்கும்.

11 அடி பிள்ளைப்பேறு உண்டாகும்.

12 அடி சேர்த்த செல்வங்கள் அழியும் நிலை.

13 அடி பகை அதிகரிக்கும், பொருள் இழப்பு ஏற்படும்.

14 அடி நஷ்டம் ஏற்படும், சபலம் உண்டாகும்.

15 அடி செல்வம் சேராது, பாவம் சேரும்.

16 அடி செல்வம் சேரும். பகை நீங்கும்.

17 அடி அரசனை போல வாழ்வு கிடைக்கும்.

18 அடி அனைத்தும் அழியும், பெண்களுக்கு நோய் ஏற்படும்.

19 அடி உயிர் சேதம் ஏற்படும்.

20 அடி தொழில், வியாபாரம் சிறக்கும், இன்பம் கூடும்.

21 அடி வளர்ச்சி ஏற்படும், பால் சம்மந்தமான அனைத்தும் சிறக்கும்.

22 அடி பகைவர்கள் அஞ்சும் நிலை உண்டாகும்.

23 அடி நோய் மற்றும் கலக்கம் ஏற்படும்.

24 அடி ஆயுள் குறையும்.

25 அடி மனைவி இறக்கும் நிலை உண்டாகும்.

26 அடி செல்வம் சேரும் ஆனால் அமைதி இருக்காது.

27 அடி புகழ் பெருகும், பாழான பயிர்கள் விளையும்.

28 அடி தெய்வ பலன் பெருகும். நிறைவான வாழ்வு ஏற்படும்.

29 அடி செல்வம் சேரும், பால் பாக்கியம் உண்டாகும்.

30 அடி வீட்டில் இலட்சுமி கடாட்சம் வீசும்.

31 அடி இறையருள் உண்டாகும்.

32 அடி ஏற்றத்தாழ்வு ஏற்படும். ஆனால் கடவுள் அருள் நிச்சயம் உண்டு.

33 அடி குடி உயரும்.

34 அடி வீட்டை விட்டு ஓடும் நிலை உண்டாகும்.

35 அடி லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

36 அடி அதிகப்படியான புகழ், உயர்வான நிலை உண்டாகும்.

37 அடி இன்பம், லாபம் இரண்டும் உண்டு.

38 அடி தீய சக்திகள் குடிகொள்ளும்.

39 அடி சுகம், இன்பம் இரண்டும் உண்டு.

40 அடி வெறுப்பு, சோர்வு உண்டாகும்.

41 அடி செல்வம், இன்பம் இரண்டும் உண்டு.

42 அடி மகாலட்சுமி குடியிருப்பாள்.

43 அடி சிறப்பற்ற நிலை உண்டாகும்.

44 அடி கண் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.

45 அடி சகல பாக்கியம் உண்டாகும்.

46 அடி குடி பெயரும் நிலை ஏற்படும்.

47 அடி வறுமை பீடிக்கும்.

48 அடி நெருப்பு சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படும்.

49 அடி மூதேவி வாசம் செய்வாள்.

50 அடி பால் பாக்கியம் உண்டாகும்.

51 அடி வழக்கு ஏற்ப்படும்.

52 அடி தானியம் அதிகரிக்கும்.

53 அடி விரயம் உண்டாகும்.

54 அடி லாபம் பெருகும்.

55 அடி உறவினர்களிடையே மனஸ்தாபம் ஏற்படும்.

56 அடி பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.

57 அடி குழந்தை இன்மை ஏற்ப்படும்.

58 அடி விரோதம் அதிகரிக்கும்.

59 அடி நன்மை தீமை அதிகம் இல்லாத மத்திம நிலை.

60 அடி பொருள் சேர்க்கை உண்டாகும்.

61 அடி பகை அதிகரிக்கும்.

62 அடி வறுமை பீடிக்கும்.

63 அடி குடி பெயரும் நிலை ஏற்படும்.

64 அடி சகல சம்பத்தும் உண்டாகும்.

65 அடி பெண்களால் இல்லறவாழ்வில் இனிமை இருக்காது.

66 அடி புத்திர பாக்கியம் ஏற்படும்.

67 அடி வீட்டில் ஏதாவது ஒரு பயம் நிலைத்திருக்கும்.

68 அடி லாபம் பெருகும்.

69 அடி நெருப்பினால் சேதம் உண்டாகும்.

70 அடி பிறருக்கு நன்மை செய்யும் நிலை உண்டாகும்.

71 அடி யோகம் உண்டாகும்.

72 அடி பாக்கியம் உண்டாகும். ஆடம்பர வாழ்வு கிடைக்கும்.

73 அடி குதிரை கட்டி வாழ்வான்.

74 அடி அதிகப்படியான அபிவிருத்தி ஏற்படும்.

75 அடி வீட்டில் சுகம் உண்டாகும்.

76 அடி உதவி கிடைக்காது, பயமே வாழ்க்கை ஆகும்.

77 அடி தேவையான அனைத்தும் கிடைக்கும். செல்வம் பெருகும்.

78 அடி வாரிசுகளுக்கு தீமை உண்டாகும்.

79 அடி கால்நடைகள் பெருகும்.

80 அடி லட்சுமி கடாச்சம் வீசும்.

81 அடி ஆபத்து உண்டாகும்.

82 அடி இயற்கையால் சேதம் உண்டாகும்.

83 அடி மரண பயம் உண்டாகும்.

84 அடி வருவாய் பெருகி செளக்கியம் உண்டாகும்.

85 அடி சீமானாக வாழ்வர்.

86 அடி தொல்லை, துயரங்கள் அதிகரிக்கும்.

87 அடி பெருமை தரக்கூடிய பிரயாணம் ஏற்படும்.

88 அடி செளக்கியம் உண்டாகும்.

89 அடி அடுத்தடுத்து வீடு கட்டும் நிலை உண்டாகும்.

90 அடி யோகம் ஏற்படும்.

91 அடி விஸ்வாசமான மனிதர்களின் சேர்க்கை ஏற்படும்.

92 அடி ஐஸ்வரியம் பெருகும்.

93 அடி பல ஊர்களுக்கு அல்லது பல தேசங்களுக்கு செல்லும் நிலை ஏற்படும்.

94 அடி நிம்மதி குறையும், அன்னிய தேசத்தில் வசிக்கும் நிலை இருக்கும்.

95 அடி தனம் பெருகும்.

96 அடி அனைத்தும் அழியும் நிலை உண்டாகும்.

97 அடி நீர் சம்மந்தமான வியாபாரம் நிலைக்கும்.

98 அடி வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

99 அடி சிறப்பான ஒரு நிலையும், தலைமைத்துவமும் இருக்கும் .

100 அடி எல்லா நலன்களும் கிடைக்கும்.

பொதுவாக 6 அடிக்கு கீழ் கழிவறையை தவிர மற்ற அறைகள் இருக்க கூடாது என்பது மனையடி சாஸ்திர விதியாகும். அதே போல மேலே கூற பட்டுள்ள மனையடி சாஸ்திரம் அட்டவணை என்பது ஒரு அறையின் உள்ளடக்கமே ஆகும். சுவரின் அளவு இதில் சேராது. மொத்த வீட்டின் அளவில் சுவரின் அளவு சேர்ந்துவிடும். மேலே கூறப்பட்டுள்ள அளவுகளில் நன்மை தரக்கூடிய எண்ணிக்கையில் வீட்டின் அகலமும் நீளமும் அதே போல அறைகளின் அகலமும் நீளமும் இருப்பது நல்லது.

உதாரணமாக ஒரு அறையின் உள்ளளவு 10 அடி நீளம் 6 அடி அகலம் என்றால் அது நல்ல அளவு. ஆனால் 10 அடி நீளம் 7 அடி அகலம் என்றால் அது தீய பலன் தர கூடியதாக இருக்கும். ஏன் என்றால் 7 அடியில் அகலமோ நீளமோ இருந்தால் தரித்திரம் உண்டாகும் என்று கூறுகிறது மனையடி சாஸ்திரம். அகல நீள அட்டவணைப்படி 6, 8, 10, 11,16, 17, 20, 21, 22, 26, 27, 28, 29, 30, 32, 33, 35, 36, 37, 39, 41, 42, 45, 50, 52, 54, 56, 59, 60, 64, 66, 68, 71, 72, 73, 75, 77, 79, 80, 84, 85, 88, 89, 90, 91, 92, 95, 97, 99, 100 ஆகிய அடிகளில் வீட்டின் அறைகளையும் வீட்டையும் அமைக்கலாம். ஆனால் இதிலும் யோகம் தரக்கூடிய சில அளவு முறைகள் உள்ளன. அவை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

மனையடி சாஸ்திரம் அளவு படி யோகம் தரக்கூடிய அளவுகள்:. 6 அடி அகலமும் 8 அடி நீளமும், 8 அடி அகலமும் 10 அடி நீளமும், 10 அடி அகலமும் 16 அடி நீளமும், 16 அடி அகலமும் 21 அடி நீளமும், 21 அடி அகலமும் 30 அடி நீளமும், 30 அடி அகலமும் 37 அடி நீளமும், 37 அடி அகலமும் 50 அடி நீளமும், 39 அடி அகலமும் 59 அடி நீளமும், 42 அடி அகலமும் 59 அடி நீளமும், 50 அடி அகலமும் 73 அடி நீளமும், 60 அடி அகலமும் 80 அடி நீளமும் வீட்டின் அளவாகவோ அல்லது அறையின் உள்ளளவாவோ இருப்பது யோக அளவாகும்.

சுவரின் உயரம் – மனையடி சாஸ்திரம் (Manaiyadi sastram wall height in Tamil)

சுவரின் உயரம் பலன்

6 அடி நன்மை விளையும், நிம்மதி ஏற்படும்.

7 அடி வறுமை ஏற்படும்.

8 அடி சகல நன்மைகளும் உண்டாகும்.

9 அடி பணப்பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும்.

10 அடி மேன்மை உண்டாகும்.

11, 12, 13 அடி நோய்களால் பெரிய தாக்கம் இருக்காது.

14 அடி எளிமையான வாழ்க்கை நிலை ஏற்படும்.

15 அடி நிம்மதி என்பது இருக்காது.

16 அடி பணம் பெருகும்.

17 அடி மேன்மை உண்டாகும்.

18, 19 அடி வீடு பாழடைந்து போகும்.

20 அடி சந்தோஷம் நிலைத்திருக்கும்.

21 அடி யோகம் உண்டாகும்.

22 அடி கெளரவம், புகழ் உண்டாகும்.

23 அடி நன்மை இல்லை.

24 அடி மனைவி மரணிப்பாள்

25 அடி எளிமையான வாழ்க்கை நிலை ஏற்படும்.

26 அடி பிள்ளைகள் வளரும் வரையில் மகிழ்ச்சி இருக்காது.

27, 28 அடி பணம் பெருகும்.

29, 30 அடி மேன்மை உண்டாகும்.

English Overview: Here we have Manaiyadi sastram in Tamil. It is also called as manaiyadi sasthiram in Tamil or manaiyadi shastram in Tamil or Manaiyadi shastra vastu in Tamil or Manaiyadi vastu in Tamil.

Pudhuulagam😍

Leave a Comment