அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே இன்று நாம் இந்த பதிவில் யோனி பொருத்தம் என்றால் என்ன?(Yoni Porutham meaning in tamil)யோனி பொருத்தம் அட்டவணை – Nakshatra animal chart in tamil, பகை உள்ள யோனி பொருத்த விலங்குகள்,27 நட்சத்திர விலங்குகள் – (27 star animal in tamil) என்பதை விளக்கமாக பார்க்க உள்ளோம் வாருங்கள் நண்பர்களே பதிவிற்குள் செல்லலாம்.
யோனி பொருத்தம் என்றால் என்ன? Yoni porutham tamil
Yoni porutham meaning in tamil – யோனி பொருத்தம் என்பது திருமணப் பொருத்தங்களில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் ஒரு பொருத்தம் ஆகும். இந்த யோனி பொருத்தத்தை வைத்து குண நலன்கள் சார்ந்த விஷயங்களை கணிக்க பெரிதும் உதவுகிறது. யோனி பொருத்தம் என்பது மிருகங்களை வைத்து குணங்களைப் பிரித்துள்ளனர்.
நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்கள் மற்றும் ஒவ்வொரு ராசிகள் உள்ளது. ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது. அந்த ஒவ்வொரு குணாதிசயத்திற்கும் ஒவ்வொரு விலங்குகள் என பிரித்து வைத்துள்ளனர். இவ்வாறு விலங்குகள் மூலமாக அவர்களுடைய குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம் அவ்வாறு தெரிந்து கொண்ட பின்பு விலங்குகளுக்கு இடையே நட்பு இருந்தால் அது பொருந்தும் அப்படி இல்லை என்றால் பொருத்தம் இருக்காது என்று அன்றே கணித்துள்ளனர் நமது முன்னோர்கள்.
இரு விலங்குகளுக்கு உண்டான நட்பு மற்றும் ஒற்றுமை திருமண தம்பதியினருக்கு இடையே ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை அமைய உதவும்.\
10 முக்கிய திருமண பொருத்தம் – சிறந்த திருமண பொருத்தம்
இரண்டு பகை விலங்குகளை கொண்ட நட்சத்திரங்கள் நினைத்தால் திருமணத்திற்கு பின்பு திருமண வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகிவிடும் அதுவும் யோனி பொருத்தம் என்பது முக்கிய திருமண பொருத்தமாகும்.
Yoni porutham tamil – யோனி பொருத்தம் எப்படி பார்ப்பது?
யோனி பொருத்தம் என்பதை மிகவும் முக்கியமான திருமண பொருத்தம் ஆகும் மேலும் தாம்பத்திய உறவின் சுகம் திருப்தி நிலை இவற்றை தீர்மானிக்கும் ஒரு கருவியாக இந்த யோனி பொருத்தம் அமைகிறது ஆண் மற்றும் பெண் யோனி நிலை மிருகங்களாக வகைப்படுத்தி உள்ளனர்.
யோனி பொருத்தம் பார்க்கும் முறை
நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண் பெண் என பிரிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு, ஆண் பெண் பகை மிருகம் எனில் பொருத்தம் இருக்காது ஆணிற்கு ஆண் மிருகம் பெண்ணுக்கு பெண் மிருகம் என இருந்தால் அது பொருந்தும் பெண்ணிற்கு ஆண் மிருகமும் ஆணிற்கு பெண்மிருமுகம் மிருகமும் இருந்தால் பொருந்தும் பகை மேலும் மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது அவ்வாறு சேர்த்தால் இல்லற வாழ்க்கை சிறக்காது என்பார்கள் எத்தனை பொருத்தங்கள் இருந்தாலும் தோனி பொருத்தம் இருந்தால் தான் அவர்களுடைய இல்லறம் தாம்பத்திய சுகம் சிறப்பாக இருக்கும்.
யோனி பொருத்தம் அட்டவணை – Nakshatra animal chart in tamil
யோனி பொருத்தம் அட்டவணை – Nakshatra animal chart in tamil
ஆண் நட்சத்திரம் | யோனி மிருகம் | பெண் யோனி | பகை யோனி மிருகம் |
அசுவினி | குதிரை | சதயம் | xxx |
பரணி | யானை | ரேவதி | சிங்கம் |
பூசம் | ஆடு | கார்த்திகை | புலி மற்றும் குரங்கு |
ரோகினி | பாம்பு | மிருகசீரிடம் | கீரி மற்றும் எலி |
திருவாதிரை | நாய் | மூலம் | பூனை மற்றும் மான் |
ஆயில்யம் | பூனை | புனர்பூசம் | எலி மற்றும் நாய் |
மகம் | எலி | பூரம் | பூனை மற்றும் பாம்பு |
உத்திரம் | பசுவகை | உத்திரட்டாதி | புலி |
சுவாதி | எருமை | அஸ்தம் | குதிரை மற்றும் புலி |
சித்திரை | புலி | விசாகம் | பசு மற்றும் எருமை மற்றும் மான் |
கேட்டை | மான் | அனுஷம் | நாய் மற்றும் புலி |
பூராடம் | குரங்கு | திருவோணம் | ஆடு |
பூரட்டாதி | சிங்கம் | அவிட்டம் | யானை |
உத்திராடம் | கீரி | xxx | பாம்பு |
பகை உள்ள யோனி பொருத்த விலங்குகள்
ஜென்ம விரோதிகள் ஆன பகை உள்ள ஆண் நட்சத்திரங்களுக்கும் பெண் நட்சத்திரங்களுக்கும் சேர்க்கக்கூடாது அவ்வாறு சேர்த்தால் இல்லற வாழ்க்கை கேள்வி குறிதான் இப்பொழுது பகை உள்ள யோனி பொருத்த விலங்குகளை பார்க்கலாம்.
- பசு புலி பொருத்தம் இல்லை
- குதிரை எருமை பொருத்தம் இல்லை
- எலி பூனை பொருத்தமில்லை
- மான் நாய் பொருத்தமில்லை
- குரங்கு ஆடு பொருத்தம் இல்லை
- யானை சிங்கம் பொருத்தம் இல்லை
- பாம்பு கீரி பொருத்தம் இல்லை.
இப்பொழுது ஒவ்வொரு ராசி நட்சத்திரத்தின் அதிபதியும் அவர்களின் மிருகமும் பற்றி விரிவாக பார்க்கலாம் மேலும் அவர்கள் வழிபட வேண்டிய தெய்வ பெயர்களையும் பார்க்கலாம்
Can we marry without yoni porutham in tamil
யோனி பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா
Can we marry without yoni porutham in tamil – யோனி பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது மேலும் நீங்கள் ஜோதிடரை அணுகுவது நல்லது அவர்கள் உங்களுடைய ஜாதகத்தை ஆராய்ந்து அதற்குண்டான பரிகாரத்தை கூறுவார்கள் அதன் பிறகு திருமணம் செய்யலாம்.
27 நட்சத்திர விலங்குகள் – 27 star animal in tamil
அஸ்வினி நட்சத்திரம் அதிபதி
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி நவகிரகங்களில் ஒன்றான கேது பகவான் ஆகும் கேது பகவான் ஞான காரகன் ஆவார்
அஸ்வினி நட்சத்திரம் மிருகம்
அஸ்வினி நட்சத்திரத்தின் மிருகம் ஆண் குதிரை ஆகும்
பரணி நட்சத்திரம் அதிபதி
பரணி நட்சத்திர அதிபதி ஒன்பது நவகிரகங்களில் ஒன்றான சுக்கிர பகவான் பரணி நட்சத்திரத்தின் அதிபதி ஆவார்
பரணி நட்சத்திரத்தின் மிருகம்
பரணி நட்சத்திரத்தின் மிருகம் ஆண் யானை ஆகும்
கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி
கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் ஆவார்
கார்த்திகை நட்சத்திரத்தின் மிருகம்
கிருத்திகை நட்சத்திரத்தின் மிருகம் பின் ஆடு ஆகும் வழிபட வேண்டிய தெய்வம் முருகப்பெருமான் ஆகும்
ரோகினி நட்சத்திரத்தின் அதிபதி
ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி நவகிரகங்களில் ஒன்றான சந்திர பகவான் ஆவர்
ரோகிணி நட்சத்திரத்தின் மிருகம்
ரோகினி நட்சத்திரத்தின் மிருகம் ஆண் நாகம் ஆகும். வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீ கிருஷ்ண பெருமாள்
மிருகசீரிடம் நட்சத்திரத்தின் அதிபதி
மிருகசீரிடம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார்
மிருகசீரிடம் நட்சத்திரத்தின் மிருகம்
மிருகசீரிடம் நட்சத்திரத்தின் மிருகம் பெண்சாரை வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் அதாவது சிவபெருமான் ஆவார்
திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி
திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு பகவான் ஆவார்
திருவாதிரை நட்சத்திரத்தின் மிருகம்
திருவாதிரை நட்சத்திரத்தின் மிருகம் ஆண் நாய் வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீ சிவபெருமான் ஆவார்
புனர்பூசம் நட்சத்திரம் அதிபதி
புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் ஆவார் அவர் மங்களக் காரகன் அவர்.
புனர்பூசம் நட்சத்திரத்தின் மிருகம்
புனர்பூசம் நட்சத்திரம் மிருகம் பெண் யானை ஆகும் வழிபட வேண்டிய தெய்வம் ஸ்ரீ ராமர் ஆவார்
பூசம் நட்சத்திரத்தின் அதிபதி
பூசம் நட்சத்திர அதிபதி சனீஸ்வர பகவான் அவர்
பூசம் நட்சத்திரத்தின் மிருகம்
பூசம் நட்சத்திரத்தின் மிருகம் ஆண் ஆடு ஆகும் வழிபட வேண்டிய தெய்வம் தட்சிணாமூர்த்தி
ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி
ஆயில்யம் நட்சத்திர அதிபதி புதன் பகவான் ஆவார் இவர் புத்தி காரகர் என்றும் அழைப்பர்.
ஆயில்யம் நட்சத்திரம் மிருகம்
ஆயில்யம் நட்சத்திரம் மிருகம் ஆண் பூனை ஆகும் வழிபட வேண்டிய தெய்வம் ஆதிசேஷன்
மகம் நட்சத்திரத்தின் அதிபதி
மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான் அவர் இவர் ஞானக்காரகர் அவர்
மகம் நட்சத்திரத்தின் மிருகம்
மகம் நட்சத்திரத்தின் மிருகம் ஆண் எலி ஆகும் வழிபட வேண்டிய தெய்வம் சூரிய பகவான் ஆவார்
பூரம் நட்சத்திரத்தின் அதிபதி
பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார்
பூரம் நட்சத்திரத்தின் மிருகம்
பூரம் நட்சத்திரத்தின் மிருகம் பெண் எலி ஆகும் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ ஆண்டாள் தேவி ஆகும்
உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி
உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரிய பகவான் ஆவார்
உத்திரம் நட்சத்திரத்தின் மிருகம்
உத்திரம் நட்சத்திரத்தின் மிருகம் எருது ஆகும் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ மகாலட்சுமி தேவி ஆகும்
அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி
அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திர பகவான் ஆவார்
அஸ்தம் நட்சத்திரம் மிருகம்
அஸ்தம் நட்சத்திரம் மிருகம் பெண் எருமை ஆகும் வணங்க வேண்டிய தெய்வம் காயத்ரி தேவி ஆகும்
சித்திரை நட்சத்திரம் அதிபதி
சித்திரை நட்சத்திரம் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார்
சித்திரை நட்சத்திரம் மிருகம்
சித்திரை நட்சத்திரம் மிருகம் ஆண் புலி ஆகும் வணங்க வேண்டிய தெய்வம் சக்கரத்தால்வார் ஆகும்
சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி
சுவாதி நட்சத்திர அதிபதி ராகு பகவான் ஆவார்
சுவாதி நட்சத்திரம் மிருகம்
சுவாதி நட்சத்திரம் மிருகம் ஆண் எருமை ஆகும் வணங்க வேண்டிய தெய்வம் நரசிம்மமூர்த்தி ஆகும்
விசாகம் நட்சத்திரம் அதிபதி
விசாகம் நட்சத்திரம் அதிபதி குரு பகவான் ஆவார்
விசாகம் நட்சத்திரம் மிருகம்
விசாகம் நட்சத்திரம் மிருகம் பெண் புலியாகும் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ முருகப்பெருமான் அவர்
அனுஷம் நட்சத்திர அதிபதி
அனுஷம் நட்சத்திரம் அதிபதி சனீஸ்வர பகவான் ஆவார்
அனுஷம் நட்சத்திரம் மிருகம்
அனுஷம் நட்சத்திரம் மிருகம் பெண் மானாகும் வணங்க வேண்டிய தெய்வம் லட்சுமி நாராயணர் ஆவார்
கேட்டை நட்சத்திரம் அதிபதி
கேட்டை நட்சத்திரம் அதிபதி புதன் பகவான் ஆவார்
கேட்டை நட்சத்திர மிருகம்
கேட்டை நட்சத்திரம் மிருகம் கலைமான் ஆகும் வணங்க வேண்டிய தெய்வம் வாராகி பெருமாள் ஆவார்
மூலம் நட்சத்திரம் அதிபதி
மூலம் நட்சத்திரம் அதிபதி கேது பகவான் ஆவார்
மூலம் நட்சத்திரம் மிருகம்
மூலம் நட்சத்திரம் மிருகம் பெண் நாயாகும் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ ஆஞ்சநேயர் அவர்
பூராடம் நட்சத்திரம் அதிபதி
பூராடம் நட்சத்திரம் அதிபதி சுக்கிர பகவானவர்
பூராடம் நட்சத்திரம் மிருகம்
பூராடம் நட்சத்திரம் மிருகம் ஆண் குரங்கு ஆகும் வணங்க வேண்டிய தெய்வம் ஜம்புகேஸ்வரர் அதாவது சிவபெருமான் அவர்
உத்திராடம் நட்சத்திரம் அதிபதி
உத்திராடம் நட்சத்திரம் அதிபதி சூரிய பகவான் ஆவார்
உத்திராடம் நட்சத்திரம் மிருகம்
உத்திராடம் நட்சத்திரம் மிருகம் பசு ஆகும் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ விநாயகப் பெருமானார்
திருவோணம் நட்சத்திரம் அதிபதி
திருவோணம் நட்சத்திர அதிபதி சந்திர பகவான் ஆவார்
திருவோணம் நட்சத்திரம் மிருகம்
திருவோணம் நட்சத்திரம் மிருகம் பெண் குரங்கு ஆகும் வணங்க வேண்டிய தெய்வம் விஷ்ணு பெருமாள் ஆவார்
அவிட்டம் நட்சத்திரம் அதிபதி
அவிட்டம் நட்சத்திரம் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார்
அவிட்டம் நட்சத்திரம் மிருகம்
அவிட்டம் நட்சத்திரம் மிருகம் பெண் சிங்கமாகும் வணங்க வேண்டிய தெய்வம் அந்தன சயனப் பெருமாள் ஆவார்
சதயம் நட்சத்திரம் அதிபதி
சதயம் நட்சத்திரம் அதிபதி ராகு பகவான் ஆவார்
சதயம் நட்சத்திரம் மிருகம்
சதயம் நட்சத்திரம் மிருகம் பெண் குதிரை ஆகும் வணங்க வேண்டிய தெய்வம் சிவபெருமான் அவர்
பூரட்டாதி நட்சத்திரம் அதிபதி
பூரட்டாதி நட்சத்திரம் அதிபதி குரு பகவான் ஆவார்
பூரட்டாதி நட்சத்திர மிருகம்
பூரட்டாதி நட்சத்திரம் மிருகம் ஆண் சிங்கம் வணங்க வேண்டிய தெய்வம் ஏகபாதர் சிவபெருமான் அவர்
உத்திரட்டாதி நட்சத்திரம் அதிபதி
உத்திரட்டாதி நட்சத்திரம் அதிபதி சனீஸ்வர பகவான் ஆவார்
உத்திரட்டாதி நட்சத்திரம் மிருகம்
உத்திரட்டாதி நட்சத்திரம் மிருகம் பசு ஆகும் வணங்க வேண்டிய தெய்வம் மகாவேசுவரர் அவர்
ரேவதி நட்சத்திரம் அதிபதி
ரேவதி நட்சத்திரம் அதிபதி புதன் பகவான் ஆவார்
ரேவதி நட்சத்திரத்தின் மிருகம்
ரேவதி நட்சத்திரத்தின் மிருகம் பெண் யானை ஆகும் வணங்க வேண்டிய தெய்வம் அரங்கநாதர் அவர்.
READ MORE :
10 முக்கிய திருமண பொருத்தம் – சிறந்த திருமண பொருத்தம்
தினப் பொருத்தம் என்றால் என்ன? – Dina Porutham Meaning In Tamil
கணப் பொருத்தம் – Gana Porutham Meaning In Tamil
மகேந்திர பொருத்தம் – Mahendra Porutham Meaning In Tamil
ஸ்திரி தீர்க்க பொருத்தம் என்றால் என்ன? shree dheerga porutham
யோனி பொருத்தம் – Yoni Porutham
திருமண ராசி பொருத்தம் – rasi porutha in tamil
இன்று நாம் இந்த பதிவில் யோனி பொருத்தம் என்றால் என்ன? யோனி பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா? மற்றும் யோனி பொருத்தம் பார்க்கும் முறை,யோனி பொருத்தம் அட்டவணை, பகையுள்ள யோனிகள் விலங்குகள், 27 நட்சத்திர விலங்குகள், மற்றும் வணங்க வேண்டிய தெய்வம், அவர்களின் அதிபதி போன்ற விஷயங்கள் இப்பொழுது பார்த்தோம் இது போன்ற தகவல்களை அறிந்திட எங்கள் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம் நன்றி.