அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே உங்களுடைய அப்பா கனவில் வந்தால் என்ன பலன் – தந்தை கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது விரிவாகவும் முழு விளக்கத்தோடு பார்க்கலாம். கனவு காண்பவர் தங்களுடைய கனவு இரவில் எந்த நேரத்தில் காண்கிறார் என்பதை பொறுத்து கனவு பலன்கள் அதனுடைய பலன்களை துல்லியமாக உங்களுக்கு கொடுக்கும் பார்க்கப் போனால் நடு இரவில் காணும் கனவு ஒரு வருடத்திற்குள் விடியற்காலையில் காணும் கனவு 10 நாட்களுக்குள்ளும் இதற்கு இரண்டிற்கும் இடையில் நடக்கும் நேரத்தில் காணும் கனவு ஒரு ஆறு மாதத்திற்குள் நடக்கும் என்பது கனவு பலன் சாஸ்திரம் ஆகும்.
அப்பா ( தந்தை) கனவில் வந்தால் என்ன பலன்
வாருங்கள் நண்பர்களே இப்பொழுது அப்பா ( தந்தை) கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்க்கலாம் பொதுவாக உங்களுடைய கனவில் உங்கள் அப்பா ( தந்தை) கனவில் வந்தால் நீங்கள் தற்போதைய சூழ்நிலையில் என் மாதிரியான மன நிலையில் உள்ளீர்கள் என்பதை பற்றி குறிக்கும் இந்த கனவு.
எளிமையாக கூற வேண்டுமென்றால் உங்களுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு நிகழ்வு ஏற்பட போகிறது அந்த நிகழ்வு உங்கள் வாழ்க்கையை பாதிப்படையச் செய்யப் போகிறது ஆனால் அது எந்த நிகழ்வு என்று கனவில் கூட நீங்கள் நினைத்து பார்த்திருக்க மாட்டீர்கள்.
உயிருடன் உள்ள அப்பா ( தந்தை) உங்களுடைய கனவில் வந்தால் அவ்வளவு நல்லதல்ல ஏனென்றால் நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு எதிராக செயல்பட போகிறீர்கள் என்று அர்த்தம் மேலும் சில கசப்பான நிகழ்வுகளும் ஏற்பட போகின்றது என்பதை குறிக்கிறது இது மாதிரியான கனவுகளால் நீங்கள் உங்களுடைய பெயரை எடுத்துக் கொள்ளும் அளவிற்கு சம்பவங்கள் நடைபெறலாம் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும்
Read More .. செல்வமகள் சேமிப்பு திட்டம் மாதம் 1000 -selvamagal semippu thittam in post office
மூலம் ஆரம்ப நிலை – உள்மூலம் அறிகுறிகள்
மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம்
அப்பா ( தந்தை) இறப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தன்னுடைய அப்பா ( தந்தை) இறந்து போவது போல் கனவு கண்டால் இதுநாள் வரையில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் மற்றும் கஷ்டப்பட்டு ஒரு விஷயத்தை முடிக்க போராடிக் கொண்டிருக்கும் அந்த விஷயத்தை மிகவும் எளிமையாக அந்த விஷயத்தில் வெற்றியடைய போகிறீர்கள் என்று அர்த்தம்
அப்பா ( தந்தை) பேசுவது போல் கனவு வந்தால் என்ன பலன்
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் அப்பா ( தந்தை) பேசுவது போல் கனவில் கண்டால் நீ நல்லாருக்களாக இருந்து வந்த பிரச்சனையில் சுமோவுமான முடிவு ஏற்படலாம் மேலும் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதற்கு ஆறுதலாகவும் உதவிகரமாகவும் நல்ல ஒரு நண்பரை சந்திக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
அப்பா ( தந்தை) விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தனது அப்பா ( தந்தை) தந்த இடம் விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் பொதுவாகவே அப்பா ( தந்தை) விளையாடுவது போல் கனவு கண்டாலே தன்னுடைய நிகழ்கால நிகழ்வை குறிப்பிடுவதாகும் மேலும் நீங்கள் உங்கள் வயதுக்கு தகுந்தவள் போல் நீங்கள் உங்கள் குணாதிசயங்கள் மற்றும் குணங்கள் பேச்சு வார்த்தைகள் நடைமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறது மேலும் உங்கள் பொறுப்புகளை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது இந்த கனவு.
அப்பா ( தந்தை) சந்தோசமாக இருப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்
கனவு காண்பவர் தன் அப்பா சந்தோஷமாக இருப்பது போல் கனவு கண்டால் இன் மாதிரியான பலன்களை அந்த கனவு தரும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
நீங்கள் உங்கள் அப்பா சந்தோஷமாக இருப்பது போல் கனவுகளை நீங்கள் கண்டிருப்பின் உங்களுக்கு தொடர்ந்து ஏதேனும் ஒரு பிரச்சனை இருப்பின் அதிலிருந்து சற்று வேகமாக வெளியேறும் படி உணர்த்தவே இம்மாதிரியான கனவுகள் ஏற்படுகிறது ஏனென்றால் அந்த பிரச்சனைகளிலிருந்து விரைவில் நீங்கள் வெளியே வந்தால் தான் உங்களுக்கு மன நிம்மதி கிட்டும் என்பது அர்த்தம்.
அப்பா ( தந்தை) கட்டிப்பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் அப்பா ( தந்தை) கட்டி பிடிப்பது போல் கனவு கண்டால் இது ஒரு நன்மையை மற்றும் மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய ஒரு கனவாகவுமே அமைகிறது ஏனென்றால் நீங்கள் உங்கள் குடும்பத்தில் மீது வைத்துள்ள அதே அன்பையும் அவர்கள் உங்கள் மீது வைத்துள்ள பாசத்தையும் வெளிக்கொண்டு வருவதை இந்த கனவு உணர்த்துகிறது.
அப்பா ( தந்தை) கோபமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தங்களுடைய அப்பா ( தந்தை) கோபமாக இருப்பது போல் கனவு கண்டால் பொதுவாக நாம் செய்யும் செயல் மற்றும் தொழிலில் உள்ள முக்கிய விஷயங்களில் சற்று கவனமாகவும் மேலும் முடிவுகள் எடுக்கக்கூடிய தருவாயில் துல்லியமான சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை குறிக்கிறது மேலும் அவ்வாறு தொழிலை போன்றுமே குடும்பத்திலும் முக்கிய முடிவுகளை சரிவர எடுத்தால் நன்மை உண்டாகும் இல்லை என்றால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படவும் அதிகம் வாய்ப்பு உள்ளது மேலும் குடும்பத்தில் பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.
உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
அப்பா ( தந்தை) சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்.
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் அப்பா ( தந்தை) சண்டை போடுவது போல் கனவு கண்டால் நீங்கள் வரும் காலகட்டத்தில் சில முக்கியமான விஷயங்களை இழக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம் மேலும் அப்பா சண்டை போட்டு பிறகு மன்னிப்பு கேட்பது போல் கனவு கண்டால் நீங்கள் ஒரு பிரச்சனையை சந்திக்க போகிறீர்கள் என்பதை குறிக்கிறது கவலை வேண்டாம் அது உங்கள் முன்னால் சமாளிக்க கூடிய வகையில் தான் அந்த பிரச்சனை இருக்கப் போகிறது பொதுவாகவே அப்பா ( தந்தை) சண்டை போடுவது போல் கனவு வந்து விட்டாலே நீங்கள் உங்கள் அப்பா நல்லிணக்க முறையில் இருக்க வேண்டும் மிகவும் பாசமாக இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது
அப்பா ( தந்தை) அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவு காண்பவரை தங்களுடைய அப்பா ( தந்தை) அடிப்பது போல் கனவு கண்டால் திடீரென்று உங்கள் குடும்பத்தில் மற்றும் பிறரிடம் ஒரு சில பிரச்சினைகள் வந்து போகும் எனவே யாரிடமும் வாக்குவாதம் செய்வதை தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
அப்பா ( தந்தை) அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்.
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தங்களுடைய அப்பா ( தந்தை) நம் முன் நின்று அழுவது போல் கனவு கண்டால் நம் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்த எண்ணங்கள் மற்றும் யாரோவரின் மீது வைத்துள்ள நம்பிக்கை அது நிறைவேறாது என்று அர்த்தம் நீங்கள் ஒரு சிலரிடம் பணவரவு செலவுகளில் ஒரு பணத்தை கொடுத்து வைத்திருப்பீர்கள் அது வருமா வராதா என்று காத்துக் கொண்டிருப்பீர்கள் ஆனால் அது வருவதில் மேலும் மேலும் இழுபிரியாகவே இருக்கும் வரவேண்டிய விஷயங்கள் வந்து சேராது அப்ப அழுவது போல் கனவு கண்டால்.
அப்பா ( தந்தை) ஆனந்த கண்ணீர் விடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் அப்பா ( தந்தை) ஆனந்த கண்ணீர் விடுவது போல் கனவு கண்டால் நீங்கள் காலகட்டத்தில் நிகழும் சூழ்நிலையில் நீங்கள் எடுத்த முயற்சி மற்றும் திட்டங்கள் அனைத்தும் வெற்றியடைய போகிறது என்று அர்த்தம் மேலும் வம்பு வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக முடியும் மறக்காமல் அந்த கனவில் உங்களுடைய அப்பா ( தந்தை) / தந்தை கூறும் வார்த்தைகள் படி நீங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் வெற்றி நிச்சயம் சந்தோசமான சூழ்நிலை நிலவும்.
அப்பா ( தந்தை) சிரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தன்னுடைய தந்தை அதாவது அப்பா ( தந்தை) சிரிப்பது போல் கனவு கண்டால் நீங்கள் எடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளுமே வெற்றிப்பாதையை நோக்கி வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் எனவே நீங்கள் செய்யும் செயலில் கவனத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் அர்த்தம் எனவே உங்களுடைய சிந்தனைகள் வெற்றி பெறப் போகிறது என்று அர்த்தம் நீங்கள் செய்யும் செயல்கள் மற்றும் வேலைகளில் அதிக கவனமும் மற்றவரிடம் நம்பிக்கையும் காட்ட வேண்டும் என்பதை குறிக்கிறது இந்த கனவு
அப்பா ( தந்தை) உடல் நலக்குறைவு ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவு காண்பவர் தங்களுடைய அப்பா ( தந்தை) உடல் நல குறைபாடு ஏற்பட போகிறது அல்லது ஏற்பட்டுள்ளது என்பதை பற்றிய கனவுகளை நீங்கள் கண்டிருப்பின் உங்களுடைய பதவி அதிகாரங்கள் அனைத்துமே வேறொருவருக்கு மாற்றமடைய போகிறது என்று அர்த்தம் எனவே நீங்கள் செய்யும் செயலில் சற்று கவனம் தேவை மிகவும் ஒரு முடிவு எடுக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது
அப்பா ( தந்தை) கனவில் வந்தால் என்ன பலன்
பொதுவாக அப்பா ( தந்தை) கனவில் வந்தால் என்னென்ன பலன் என்பதை பற்றி முழு விரிவாக இப்பொழுது இந்த கட்டுரையில் நீங்கள் படித்திருப்பீர்கள் மேலும் ஏதேனும் உங்களுக்கு கனவுகள் வந்திருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும் அதற்குண்டான பலன்களை நாங்கள் உங்களுக்கு தருகிறோம் நன்றி.