கணப் பொருத்தம் – (Gana Porutham Meaning In Tamil) கணப்பொருத்தம் என்றால் என்ன? (What Is Gana Porutham) கண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா? போன்ற அனைத்து விதமான கேள்விகளுக்கும் விடைகளை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
கண பொருத்தம் என்றால் என்ன – Gana Porutham Meaning In Tamil
கணப் பொருத்தம் என்பது திருமணத்திற்கு பார்க்கப்படும் முக்கிய பொருத்தங்களில் ஒன்றாகும் இந்த கண பொருத்தம் எதை குறிப்பிடுகிறது என்றால் ஆண் மற்றும் பெண்ணின் குணாதிசயங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த கண பொருத்தம் மிகவும் உதவுகிறது.
கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் இல்லாமல் மற்றும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்வதை பற்றி இந்த கண பொருத்தத்தை பார்த்தாலே தெரிந்து விடும் கணம் பொருத்தம் இருந்தால் கணவன் மனைவியிடையே மிகவும் ஒற்றுமை தென்படும் இதுவே கண பொருத்தம் இல்லை என்றால் ஒற்றுமை என்பது கேள்விக்குறிதான்.
ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் தனிப்பட்ட குணாதிசயங்கள் உள்ளது இந்த கண பொருத்தத்தில் மூன்று விதமான குணாதிசயங்கள் வகை என பிரிக்கப்பட்டுள்ளது அவற்றைப் பற்றி விரிவாக பார்க்கலாம்
கணப் பொருத்தம் – Gana Porutham Meaning In Tamil
கண பொருத்தம் என்றால் என்ன? என்ற கேள்வி நம்முள் பல பேருக்கு உள்ளது கணப் பொருத்தம் என்பது ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியே குணாதிசயங்கள் உள்ளது அந்த குணாதிசயங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்த கண பொருத்தம் பெரிதும் உதவுவதால் இது மிகவும் முக்கியம். அதை மூன்று விதமாக நமது முன்னோர்கள் பிரித்து வைத்துள்ளனர்
கண பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன?
கணம் என்றால் கூட்டம் என்று பொருள் 27 நட்சத்திரங்களை மூன்று விதமான பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் இருவரின் இல்லற வாழ்க்கை ஒற்றுமை போன்ற விஷயங்கள் தீர்மானிக்க இந்த கணம் உதவுகிறது
- தேவ கணம்
- மனுஷ கணம்
- ராட்சச கணம்
மூன்று விதமான கணங்கள் உள்ளது திருமணம் ஆகக்கூடிய ஆண் மற்றும் பெண் இருவரில் ஒருவருக்கு தேவகணமும் மற்றொருவருக்கு மனுஷ கனமும் இருந்தால் நல்லது உத்தமம்
மேலும் பெண் தேவ கணம் ஆண் ராட்சச கணம் ஆக இருந்தால் மத்திமம்
பெண் ராட்சச கனமாகவும் ஆண் தேவ கனமாகவும் இருந்தால் அது பொருத்தம் இல்லை
மேலும் பெண் ராட்சச கணம் ஆண் மனுஷ கனமாக இருந்தாலும் பொருத்தம் இல்லை
READ MORE >> 10 முக்கிய திருமண பொருத்தம் – சிறந்த திருமண பொருத்தம்
27 நட்சத்திர கணம் – கணப்பொருத்தம் அட்டவணை
தேவ கணம் நட்சத்திரம்
- தேவ கணம் நட்சத்திரம்
- அசுவினி
- மிருகசீரிடம்
- புனர்பூசம்
- பூசம்
- அஸ்தம்
- சுவாதி
- அனுஷம்
- திருவோணம்
- ரேவதி
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நட்சத்திரங்கள் அனைத்தும் தேவ கணத்தில் வரும் இதுவே தேவகண நட்சத்திரங்கள் ஆகும்.
மனித கணம் நட்சத்திரம்
பாருங்கள் நண்பர்களே இப்பொழுது மனித கணம் நட்சத்திரங்களை பார்க்கலாம்
- பரணி
- ரோகினி
- திருவாதிரை
- பூரம்
- உத்திரடம்
- பூராடம்
- உத்திராடம்
- பூரட்டாதி
- உத்திரட்டாதி
மேலே குறிப்பிட்டுள்ள நட்சத்திரங்கள் அனைத்தும் மனித கண நட்சத்திரங்கள் ஆகும்
ராட்சச கணம் நட்சத்திரம்
இப்பொழுது நாம் ராட்சச கணம் நட்சத்திரங்களை பார்க்கலாம்
- கார்த்திகை
- ஆயில்யம்
- மகம்
- சித்திரை
- விசாகம்
- கேட்டை
- மூலம்
- அவிட்டம்
- சதயம்
மேலே குறிப்பிட்டுள்ள நட்சத்திரங்கள் அனைத்தும் ராட்சச கணம் நட்சத்திரங்கள் ஆகும்.
கணப்பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?
கண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாம் கண பொருத்தம் இல்லையென்றால் தினம் பொருத்தம் இருந்தால் நாம் தாராளமாக திருமணம் செய்யலாம் மேலும் ஜோதிடரிடம் ஆலோசனை பெறுவது நல்லது அப்படி இந்த பொருத்தம் இல்லை என்றாலும் சுபமுகூர்த்தம் அதாவது அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்தால் அனைத்து தோஷங்களும் விலகிவிடும் என்பார்கள்.
READ MORE >>தினப் பொருத்தம் என்றால் என்ன? – Dina Porutham Meaning In Tamil
READ MORE :