உங்கள் கனவில் உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் மேலும் அதில் நல்ல பலனா இல்லை தீய பலனா என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
அனைவருக்கும் கனவுகள் வருவது ஒரு இயல்பான விஷயம் ஆனால் அது மாதிரியான கனவுகள் வரும்பொழுது சில கனவுகள் மட்டுமே அவற்றை உற்று நோக்க செய்யும் அம்மாதிரியான கனவுகள் நல்ல கனவாகவும் இருக்கலாம் அல்லது தீய கனவாகவும் இருக்கலாம்.
நல்ல கனவுகள் எப்பொழுதுமே நமக்கு மனதிற்கு திருப்தி அளிக்கிறது. ஆனால் அதற்கு மாறாக தீய கனவுகள் ஏற்படும் போது இரவில் தூக்கமின்மை ஏற்படுவதுடன் பதட்டமும் பயமும் நம்மில் குடி கொள்கிறது. கவலைப்படத் தேவையில்லை நண்பர்களே நாங்கள் உங்களுக்கு எம்மாதிரியான கனவுகள் ஏற்பட்டாலும் அந்த கடவுளுக்கு உண்டான பலன்களை முழு விளக்கத்துடன் உங்களுக்கு நாங்கள் அளிக்கிறோம் நீங்கள் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் உங்கள் ஆதரவுக்கு நன்றி வாருங்கள் இப்போது உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன் இம்மாதிரியான பலனை இம்மாதிரியான கனவுகள் தரும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக கனவுகள் என்பது நமது ஆழ் மனதில் உள்ள நினைவலைகள் தான் நான் உறங்கும் பொழுது கனவாக வருகிறது மேலும் அம்மாதிரியான கனவுகள் சில சமயங்களில் புதிதாக இருக்கும் அம்மா மாதிரியான கனவுகள் மீது நமக்கு ஒரு எதிர்பார்ப்பு ஏற்படும் அதையே நாம் இணையதளங்களில் தேடி அதற்குண்டான பலன்களை அறிகிறோம்.
முன்னாள் காலகட்டங்களில் கனவு பலன் என்பது மிக சரியான முறையில் கணிக்கப்பட்டு நம் தமிழர்கள் பின்னால் வரவிருப்பதை முன்பே கணித்து அதற்கு தகுந்தார் போல் அவர்களது செயல்கள் இருந்தது எனவே அவர்கள் சிறந்து விளங்கினார்கள் இன்றைய காலகட்டங்களில் நாம் கனவுகள் என்பது மிகவும் எளிதானதாக எடுத்துக்கொண்டு கடந்து செல்கிறோம் கவலை வேண்டாம் அனைத்து பலன்களும் நமது இணையத்தில் உள்ளன பார்த்து நீங்கள் அதற்கு உண்டான பலனை அறிந்து கொள்ளுங்கள்.
ஒரு கனவை நீங்கள் காண்கிறீர்கள் என்றால் அந்த கனவு இரவு நேரத்தில் குறிப்பாக எந்த காலகட்டத்தில் அந்த கனவை காண்கிறீர்கள் என்பதை பொறுத்து அதற்குண்டான பலன்கள் எக்கால கட்டத்தில் நடக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியும் பொதுவாக அதிகாலை 3 மணிக்கு மேல் கண்ட கனவு ஒரு வருடத்திற்குள் மூணு மணிக்கு பிறகு காணும் கனவு ஆறு மாதத்திற்குள்ளும் ஆறு மணிக்கு முன்பு காணும் கனவு 10 நாட்களுக்குள்ளும் நடக்கும் மேலும் அதன் பலனை கனவு காண்பதற்கு தரும் என்பது கனவு பலன் சாஸ்திரம் கூறுகிறது.
பாருங்கள் நண்பர்களே இப்பொழுது நாம் பதிவுக்குள் செல்லலாம்.
உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
உறவினர்கள் உங்கள் கனவில் வந்தால் கனவு காண்பதற்கு கூடிய விரைவில் மனதிற்கு சந்தோசமான செய்தி ஒன்று வந்து சேரப் போகிறது என்று அர்த்தம் மேலும் உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்பதை இன் மாதிரியான கனவுகள் குறிப்பிடுகிறது.
நீங்கள் உங்கள் கனவில் உறவினர்களுடன் சந்தோஷமாக இருப்பது போல் கனவு கண்டால் உங்கள் தொலைதூர செய்திகள் உங்களுக்கு இனிமை தரும் மேலும் தொலைதூர வேலைகள் நல்லபடியாக நிறைவேறும் என்று அர்த்தம்.
நீங்கள் உங்கள் கனவில் உறவினர்களுடன் அவர்களது குழந்தைகளை கனவில் கண்டால் இது ஒரு நல்ல கனவாகும் ஏனென்றால் குழந்தை செல்வம் உங்கள் கனவில் தெரிந்தால் உங்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் பணவரவுகள் தாராளமாக இருக்கும்.
அதிகப்படியான உறவினர்களை உங்கள் கனவில் கண்டால் உங்களுக்கு கூடிய விரைவில் ஒரு நல்ல நட்பு அமையப் போகிறது என்று அர்த்தம் மேலும் நல்ல நட்பு வட்டாரம் பெற போகிறீர்கள் என்று அர்த்தம்.
உறவினர்கள் வீட்டிற்கு வருவது போல் கனவு கண்டாலும் அல்லது உறவினர்கள் உங்கள் வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் நன்மை நடக்கப் போகிறது என்றும் மேலும் நீண்ட நாட்களாக தடைபட்ட ஏதோ ஒரு காரியம் வெற்றி கரமாக வெற்றி அடையப் போகிறது என்பதை குறிப்பிடுகிறது இந்த கனவு.
மேலும் உறவினர்களுடன் சிரித்து உரையாடுவது போல் உறவினர்கள் உங்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் உண்டான வறுமை நிலை நீங்கி இன்பம் உண்டாகப் போகிறது என்றும் உங்கள் வாழ்வில் மேன்மை அடையப் போகிறேன் என்று அர்த்தம்.
உங்களுடைய தந்தை கனவில் வந்தால் என்ன பலன்
உங்களுடைய தந்தை உன் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்க்கலாம் உறவுகள் உறவினர்களில் மிக முக்கியமான உறவுகள் நம் குடும்ப உறவுகள் தான் அதில் நம் கனவில் தந்தையை கனவில் பார்த்தால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
முதலாவதாக கனவு காண்பவர் தந்தையை கனவில் கண்டால் அனைத்து தீமைகளும் விலகப் போகிறது என்று அர்த்தம் மேலும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் அடுத்த கட்டமாக நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள் என்று அர்த்தம்.
உங்களது கனவில் உங்கள் தந்தை உங்களை கட்டி அணைப்பது போல் கனவு கண்டால் நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த ஏதோ ஒரு பிரச்சனை சுமூகமாக முடிவடைய போகிறது என்று அர்த்தம்.
இறந்து போன உங்கள் தந்தையை நீங்கள் கனவில் கண்டால் இது ஒரு நல்ல கனவாகும். மேலும் நீங்கள் ஏதாவது ஒரு செயலில் சிக்கி மாட்டிக் கொண்டிருந்தாலோ அல்லது உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தாலும் அது கூடிய விரைவில் தந்தையின் அணுக்கருகையினால் அது நீங்க பெற்று நீங்கள் வாழ்வில் நல்ல நிலைமைக்கு வரப் போகிறீர்கள் என்பதை குறிப்பிடுகிறது மேலும் சொந்த முயற்சியில் வெற்றி அடையப்போகிறீர்கள் என்றும் அர்த்தம்.
தாய் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்.
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் உங்களது தாய் கனவில் வந்தால் எம்மாதிரியான பலன்களை அவர் உங்கள் வாழ்வில் தரப்போகிறேன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
தாயன் என்பவள் அன்பானவள் அப்பேர்ப்பட்ட அன்பான தாய் உங்கள் கனவில் வந்தால் நீங்கள் செய்யும் காரியங்களில் மிகவும் கவனக்குறைவுடன் செயல்படுவதை குறிப்பிடுகிறது மேலும் செய்யும் காரியங்கள் மற்றும் செயலில் சற்று துரிதமாக செயல்பட்டால் வாழ்வில் வெற்றி அடையலாம் என்பதை உணர்த்த வருகிறது இது மாதிரியான கனவுகள்கனவுகள்.
உங்களது கனவில் உங்களுடைய இறந்து போன தாய் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்.
இறந்து போன தாயை உங்கள் கனவில் கண்டால் அவர்கள் மீது அளவற்ற பற்றின் காரணமாகவும் இம்மாதிரியான கனவுகள் வரும் மேலும் முக்கியமாக இறந்து போன தாயை உங்கள் கனவில் கண்டால் உங்கள் குடும்பத்தில் கூடிய விரைவில் ஒரு அழகான பெண் குழந்தை உங்கள் தாயைப் போல் பிறக்கப் போகிறாள் என்றும் அர்த்தம்.
உங்கள் தாய் எம் மாதிரியாக இருந்தாலும் சரி உங்கள் கனவில் வந்தால் உன் குலதெய்வ வழிபாடு நிச்சயமாக செய்ய வேண்டும் உங்கள் தாய் உங்கள் கனவில் வருவது உங்களுக்கு வரக்கூடிய ஆபத்து உங்கள் குலதெய்வம் தடுக்கும் என்பதை குறிப்பிடுகிறது மேலும் குலதெய்வ வழிபாடு முக்கியம் என்பதை குறிக்கிறது.
அம்மா கனவில் வந்தால் என்ன பலன் தருவார்.
நம்மை பெற்றெடுத்த (தாய்)அம்மா உங்கள் கனவில் வந்தால் கனவு காண்பவர் நீண்ட நாட்களுக்கு முன்பாக உங்கள் குலதெய்வ கோயிலில் ஏதோ ஒரு வழிபாடு செய்யாமல் இருப்பதை குறிப்பிடுகிறது தாய் என்பவள் கனவு வரும்பொழுது குலதெய்வம் சம்பந்தமானதாகவே இருக்கிறது.
மேலும் கனவில் உங்கள் தாய் அம்மா கனவில் வந்தால் நீங்கள் குலதெய்வ வழிபாடு நிச்சயமாக செய்ய வேண்டும்
சகோதர்கள் கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்.
உங்களுடைய கனவில் உங்களது இளைய சகோதரர்கள் அல்லது மூத்த சகோதர்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார் என்பதை பற்றி பார்க்கலாம்.
சகோதரர்களே உங்கள் கனவில் கண்டால் நற்செய்தி உங்கள் இல்லம் தேடி வரும் இளைய மற்றும் மூத்த சகோதரர்கள் உங்களை விட்டு பிரிந்து செல்வது போன்ற மாதிரியான கனவுகள் நற்பலனையே உங்களுக்கு தரும் மேலும் உங்கள் சகோதரர்கள் இறப்பது போல் உங்களுக்கு கனவு வந்தால் கனவு கண்டால் காண்பவருக்கு சில சங்கடமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம்.
சகோதரர்கள் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு நீண்ட நாட்கள் ஆக திருமணம் நடக்கவில்லை என்றால் திருமணம் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
கனவில் சகோதரி கனவில் வந்தால் என்ன பலன்.
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் சகோதரியை கனவில் கண்டால் வருமானம் வரப்போகிறது என்று அர்த்தம் மேலும் உங்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் விலகி முன்னேற்றம் ஏற்படப் போகிறது என்று அர்த்தம்.
உங்கள் தொழிலில் ஏற்பட்டுள்ள தடைகள் அனைத்தும் விலகி சிறப்பான விதத்தில் தொழில் அமையப்பெற்று நன்கு தன லாபம் ஏற்றுப் போகிறார்கள் என்று அர்த்தம்.
நீங்கள் நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்ற உறவுகள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள் என்றும் மேலும் அவர்களால் உங்களுக்கு சுப விரயங்கள் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது எனவே கனவு காண்பவர் தன்னுடைய கனவில் சகோதரியை கனவில் கண்டால் நன்மை என்று எடுத்துக் கொள்ளலாம்.
அக்கா கனவில் வந்தால் என்ன பலன்.
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தனது கூடப்பிறந்த அக்காவையோ அல்லது உறவினர் வழியில் அக்கா முறையில் சொந்தத்தை கனவில் கண்டாலோ உங்களுக்கு நீண்ட நாட்களாக ஏற்பட்டிருந்த கஷ்டங்கள் விலகி பணம் புழக்கம் ஏற்பட போகிறது என்றும் மேலும் அக்கா உங்கள் இல்லத்திற்கு வருவது போல் கனவு கண்டால் உங்களுடைய வருமானம் பெருகி பொன் பொருள் சேர்க்கை உண்டாகப் போகிறது என்று அர்த்தம் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகப் போகிறது என்றும் அர்த்தம்.
சித்தி கனவில் வந்தால் என்ன பலன்.
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் சித்தியை கனவில் கண்டால் அவர்களுடைய நட்புகள் மற்றும் நண்பர்கள் அதிகரிக்கப் போகிறார்கள் என்று அர்த்தம் மேலும் பொன் பொருள் பணம் சேரப் போகிறது என்பதை குறிக்கிறது இம்மாதிரியான கனவுகள்.
உறவினர்களின் குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்
கனவு காண்பவர் தங்களுடைய கனவில் தன் சொந்த குழந்தைகளையோ அல்லது உறவினர்களின் குழந்தையோ கனவில் கண்டால் நல்ல முன்னேற்றம் வாழ்வில் ஏற்ப போகிறது என்று அர்த்தம் மேலும் நீங்கள் வாழ்வில் கொண்டுள்ள கஷ்டங்கள் அனைத்தும் உலகப்போகிறது என்று அர்த்தம். மேலும் நீங்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் காணப் போகிறீர்கள் என்றும் குறிப்பிடுகிறது கனவு பலன்கள்.
Read More .. செல்வமகள் சேமிப்பு திட்டம் மாதம் 1000 -selvamagal semippu thittam in post office
மூலம் ஆரம்ப நிலை – உள்மூலம் அறிகுறிகள்
மூல நோய் குணமாக பாட்டி வைத்தியம்
தாய்மாமன் கனவில் வந்தால் என்ன பலன்.
தாய்மாமன் உங்கள் கனவில் வந்தால் என்ன பலன்களை கனவு காண்பவர் அடையப் போகிறார் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம் தாய்மாமன் என்பவர் தனது தாயின் அண்ணனாவர் அவர் கனவில் காண்பது சிறு சிறு தடங்கல்கள் தொழிலில் வந்து செல்வதையும் மேலும் செய்யும் தொழிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது எனவே உங்களின் தாய் மாமன் உங்கள் கனவில் வந்தால் செய்யும் தொழில் சற்று கவனமாக இருக்க வேண்டும் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது.
மேலும் உங்கள் கனவில் உங்கள் சொந்தத்தில் உள்ள மாமா உறவு முறையில் யாராவது ஒருவர் உங்கள் கனவில் வந்தால் செய்யும் தொழிலில் சற்று கவனமும் வியாபாரத்தில் கவனமும் தேவை.
முன்னோர்கள் கனவில் வந்தால் என்ன பலன்
நம் கனவில் நம்மளுடைய முன்னோர்களை நாம் கனவில் கண்டால் நமக்கு எம்மாதிரியான பலன் ஏற்படப் போகிறது என்பதை கனவு பலன் சாஸ்திரம் கூறுகிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
நமது முன்னோர்கள் நீண்ட பெரிய வாழ்வை கொண்டு நல்ல முறையில் மரணம் எழுதியிருந்து அவர் உங்களுடைய கனவில் வந்தால் அவரது ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கப்பெற்று உள்ளது என்று அர்த்தம் மேலும் நீங்கள் ஏதாவது ஒரு காரியம் செய்யப் போகிறேன் என்றால் அது வெற்றியடைய போகிறது என்று அர்த்தம்
நீங்கள் துருமரணம் எழுதிய முன்னோர்களை நீங்கள் உங்கள் கனவில் பார்த்தால் இது சற்று கேட்ட கனவாகவே அமைகிறது மேலும் குல தெய்வ வழிபாடு தெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானதாகும் மாதிரியான கனவு காண்பவர் தீபாவளிபாடு செய்வது நன்மை விளைவிக்கும் அவருக்கு ஏற்படும் தீமையை குறைக்கும்.
மேலும் கண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு
உறவினர்கள் கனவில் வந்தாலும் எம்மாதிரியான கனவுகள் வந்தாலும்
நீங்கள் அதை நினைத்து பயப்படத் தேவையில்லை நீங்கள் கெட்டவன் கனவு ஏதேனும் நீங்கள் கண்டிருந்தால் குலதெய்வ வழி தெய்வ வழிபாடும் செய்தாலே போதும் உங்களுக்கு வரவிருக்கும் ஆபத்துக்கள் அனைத்தும் விலகி விடும்.